சொந்த காணியை பார்வையிட்டு வீடு திரும்பிய முதியவருக்கு நடந்த சோகம்!!

2000 ஆம் ஆண்டு இடம்பெயர்வுக்கு பின்னர் தற்போது மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்பட்ட தனது காணியை பார்வையிட்டு வீடு திரும்பிய முதியவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் நடந்துள்ளது.

முகமாலை மடத்தடியைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

முகமாலையில் உள்ள காணிக்குச் சென்று மீசாலை கிழக்கில் உள்ள வீட்டுக்கு ஈருருளியில் திரும்பிய முதியவரை பட்டா ரக வாகனம் மோதியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like