தத்தெடுப்பது – தரக்குறைவானது அல்ல!!

0 22

கன­டா­வில் வாழு­கின்ற எனது நண்பி ஒருத்தி இலங்­கைக்கு வந்­தி­ருந்­தாள். என்­னைச் சந்­தித்த தரு­ணம் ஒன்­றில் பல விட­யங்­க­ளைப் பரி­மா­றி­னாள். இலங்­கை­யி­லும் கன­டா­வி­லும் வாழு­கின்ற எமது இள­வ­யது நண்­பி­கள் பல­ருக்­குக் குழந்தை இல்லை என்ற தலைப்பு பேசு­பொ­ரு­ளாக வந்­த­மைந்­தது.

‘‘என்னை என்ர அப்­பா­வும் அம்­மா­வும் தத்­தெ­டுத்­துத்­தானே வளர்த்­தார்­கள். அவர்­கள் என்­னைப் பிள்­ளை­யா­கப் பார்க்­க­வில்­லையா? இன்று எனக்கு மூன்று பிள்­ளை­கள் இருக்­கி­றார்­கள். மூத்­த­வள் பல்­க­லைக்­க­ழ­கப் படிப்பை முடிக்­க­வி­ருக்­கி­றாள். என் அப்­பா­வும், அம்­மா­வும் என்­னைத் தத்­தெ­டுத்­த­தால் அவர்­க­ளுக்­குப் பிள்ளை இல்லை என்ற குறை நீங்­கி­யது. அவர்­க­ளுக்கு 3பேரப் பிள்­ளை­கள் இருக்­கி­றார்­கள். அப்­பா­வும் அம்­மா­வும் தமது வய­தான காலத்தை எவ்­வ­ளவு சந்­தோ­ச­மா­கக் கழிக்­கின்­ற­னர். இதை­விட வாழ்க்­கை­யில் என்ன வேண்­டும்’’ என்­றாள்.

அவள் ஒரு கிறிஸ்­த­வக் குடும்­பப் பெண். கிறிஸ்­தவ மத­மும், அந்த மதத்­தி­லுள்ள மற்­ற­வர்­க­ளுக்கு உத­வும் பண்­பும், தமக்­குப் பிள்­ளை­கள் இல்­லா­த­வி­டத்து வேறு ஒரு குழந்­தையை எடுத்து வளர்க்­கும் நிலையை அவர்­க­ளி­டத்தே தோற்­று­வித்­தி­ருக்­க­லாம். இந்து மதம் சார்ந்த தமி­ழர்­கள் இவ்­வா­றான விட­யத்­தில் இவர்­க­ளைப்­போன்ற அள­வுக்கு ஈடு­படு காட்­டு­வ­தில்லை.

செயற்­கைக் கருத்­த­ரிப்பு முறை
பிள்­ளைப்­பேறு இல்­லாத தம்­ப­தி­யர் ஒரு குழந்­தை­யைத் தத்­தெ­டுக்க முன்­வ­ரு­வ­தற்கு முத­லில், செயற்கை முறைக் கருத்­த­ரிப்­பில் நாட்­டம் கொண்டு அதிக பணத்­தைச் செல­வ­ளித்து நிற்­கி­றார்­கள். வெளி­நாட்­டில் வாழு­கின்ற பல தம்­ப­தி­யர் இந்­தி­யா­வுக்­குச் சென்று செயற்­கைக் கருத்­த­ரிப்­பிலோ, அது சாத்­தி­யப்­ப­டா­வி­டில் ஒரு வாட­கைத்­தா­யைப் பணத்­துக்கு அமர்த்­தியோ தமக்­கான பிள்­ளை­யைப் பெற்­றுச் செல்­கின்­ற­னர். பல வறு­மைப்­பட்ட பெண்­கள் வாட­கைத் தாயாகி இதை ஒரு வரு­மான மார்க்­க­மா­கச் சட்­ட­பூர்­வ­மற்ற முறை­யி­லும் மேற்­கொள்­கின்­ற­னர். இதைத் தெளி­வு­ப­டுத்­தும் வகை­யில் பிர­பல சிங்­கள நடிகை சுவர்ணா மல்­ல­வ­ராய்ச்சி நடித்த ஒரு திரைப்­ப­டம் உண்டு.

தத்­தெ­டுப்­ப­தற்கு மதத்­தில் தடை­கள்
குழந்­தை­க­ளைத் தத்­தெ­டுக்­கும் விட­யத்­தில் இந்து மதம் மிகப்­பெ­ரும் தடை­யாக உள்­ளது. குழந்தை இல்­லாத பெற்­றோரை நல்ல காரி­யங்­க­ளின்­போது முன்­னுக்கு நின்று செயற்­ப­டு­வது சகு­னப் பிழை என்­கிற இந்து மதம் குழந்­தை­யைத் தத்­தெ­டுக்­கும் விட­யத்­தில் வர்­ணாச்­சி­ரம தர்ம கோட்­பாட்டை நம்­பு­வ­தால், தத்­தெ­டுக்­கும் விட­யத்­தி­லி­ருந்து பின்­வாங்­க­வேண்­டியுள்­ளது.

இனம், மதம், சாதி, கோத்­தி­ரம் எனப் பல விட­யங்­க­ளில், தாம் சார்ந்த சமூ­கத்­துக்­குப் பயப்­ப­ட­வேண்­டி­யி­ருப்­ப­தால், ஒரு குழந்­தை­யைத் தத்­தெ­டுக்­கும் துணிவு இந்து மதப் பெற்­றொ­ருக்கு இருப்­ப­தில்லை.

இந்­துக்­க­ளுக்­குத் தத்­தெ­டுக்­கும் விட­யத்­தில் இருக்­கின்ற இன்­னோர் அச்­சம் சாதி பற்­றி­ய­தா­கும். தமது குலத்­துக்கு இசை­வாக இல்­லா­விட்­டால், சமூ­கம் தம்மை ஒதுக்கி வைத்­து­வி­டும் என்ற பய­மும், தாம் வளர்க்­கும் பிள்ளை பாட­சாலை, வேறு விட­யங்­க­ளுக்­காக வெளி­யில் செல்­லும்­போது அய­ல­வர்­க­ளும் சொந்­தக் காரர்­க­ளும் ‘‘நீ அவை­யள் பெத்த பிள்ளை இல்லை’’ என்று கூறி­விட்­டால், அந்­தப் பிள்­ளைக்­கும் தமக்­கும் இடை­வெளி

வந்­து­வி­டும் என்ற பய­மும் தமது சொத்­துக்­க­ளைப் பிழை­யான வழி­யில் அழித்­து­வி­டும் என்ற பய­மும் தத்­தெ­டுப்­ப­தற்கு முனை­கின்ற பெற்­றோர்­க­ளுக்கு இருக்­கவே செய்­கி­ன்றன.

சமூ­கம் மீதான பயம்
வெளி­நா­டு­க­ளில் வாழு­கின்ற தமி­ழர்­கள் பலர் சுனாமி இட­ரின்­போ­தும் வேறு சந்­தர்ப்­பங்­க­ளின்­போ­தும் பிள்­ளை­க­ளைத் தத்­தெ­டுத்த சந்­தர்ப்­பங்­கள் நடந்­தே­றி­யுள்­ளன. இதே விட­யத்தை உள்­நாட்­டில் வாழு­கின்ற தம்­ப­தி­யி­னர் விரும்­பு­வ­தில்லை என்­ப­தை­விட சமூ­கத்­துக்கு முகம் கொடுப்­ப­தி­லுள்ள சிக்­கல்­கள் கார­ண­மா­கத் தவிர்க்க வேண்­டிய நிலை­யி­லுள்­ள­னர் என்­று­கூ­று­வதே பொருத்­த­மா­னது.

நாய், பூனை­போன்ற எங்கோ பிறந்த மிரு­கங்­க­ளில் அன்பு செலுத்தி அவற்றை வளர்க்கும் மக்­கள் பலர் ஒரு பிள்­ளை­யைத் தத்­தெ­டுத்து அன்பு காட்­டு­வ­தில் பின்­னிற்­கின்­ற­னர். குழந்தை இல்­லாத தம்­ப­தி­யி­ன­ருக்­குத் தமது பிள்ளை ஒன்றை உத்­தி­யோ­க­பூர்­வ­மா­கத் தத்­துக்­கொ­டுத்த அரி­தான சம்­ப­வங்­க­ளும் இருக்­கத்­தான் செய்­கின்­றன. இந்த விட­யத்­தில் தமது உற­வுக்­கா­ர­ரின் குழந்தை என்ற நிலை காணப்­ப­டு­கின்­றது.

குழந்­தை­கள் இல்­லாத பல தம்­ப­தி­கள் இந்­தி­யா­வுக்­குச்­சென்று குழந்தை ஒன்­றைப் பெற்­றுக்­கொள்­ளும் முயற்­சி­யில் இறங்­கு­கின்­ற­னர். இது சில­ருக்­குச் சாத்­தி­யப்­பட்­டா­லும் பலர் பெரும் தொகை­யான பணத்தை இழக்­கின்­ற­னர். அது­வும் வெளி­நா­டு­க­ளில் இருந்து வரு­ப­வர்­கள் என்­ப­தைத் தெரிந்து கொண்­டால், அந்த மருத்­து­வர்­க­ளின் கவ­னம் பணம் பிடுங்­கு­ வ­தில்­தான் அதி­க­மாக இருக்­கும் என இந்­தியா சென்­று­வந்த பலர் கூறு­கின்­ற­னர்.

உயிர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­பது நற்­கா­ரி­யமே!
இந்து நிறு­வ­னங்­கள் பிள்­ளை­க­ளைத் தத்­தெ­டுத்­துப் பிள்­ளைப்­பேறு இல்­லாத பெற்­றோ­ருக்கு வழங்­கும் ஏற்­பா­டு­க­ளைச் செய்ய முடி­யும். அதே­வேளை மகப்­பேற்று மருத்­து­வர்­க­ளும் இது விட­யத்­தில் நல்­ல­தொரு சமூ­கக் கண்­ணோட்­டத்­தில் சிந்­திப்­பது கட்­டா­ய­மா­கும். இதன் மூலம் வாழ வழி­யின்றி வறு­மை­யி­லி­ருக்­கும் குழந்­தை­கள் தவ­றான முடி­வெ­டுத்து உயிரை மாய்ப்­ப­தைத் தவிர்த்து, அந்­தக் குழந்­தை­களை வச­தி­யா­ன­வர்­கள் காப்­பாற்ற முடி­யும். இத்­த­கைய செயற்­பாட்­டின் மூலம் இனப்­பெ­ருக்­க­மின்­றிச் சுருங்கி வரும் தமி­ழி­னம் தன்னை ஓர­ள­வுக்கு அழி­வின் வேகத்­தி­லி­ருந்து காத்­துக்­கொள்ள முடி­யும்.

கொழும்பு லேடி றிச்வே மருத்­து­வ­ம­னை­யில் மகப்­பேற்று வைத்­திய நிபு­ண­ரா­கக் கட­மை­யாற்­றும் திரு­மதி. லிய­னகே என்­ப­வர் 13வய­து­டைய மாணவி ஒரு­வர் கர்ப்­ப­முற்­றி­ருப்­பதை அறிந்து அந்த மாண­வியை மிக­வும் கௌர­வத்­து­டன் இர­க­சிய இடம் ஒன்­றில் தங்க வைத்­துப் பரா­ம­ரித்து குழந்தை கிடைத்­த­தும் அந்­தக் குழந்­தை­யைத் தத்­தெ­டுக்­கக் காத்­தி­ருந்த ஒரு தம்­ப­தி­யி­ன­ருக்கு வழங்­கி­யி­ருக்­கி­றார். இவ­ரது இந்த நட­வ­டிக்­கை­யைப் பெண்­கள் மற்­றும் சிறு­வர் விவ­கார அமைச்சு கௌர­வித்­தி­ருந்­த­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

தவ­று­த­லா­கக் கர்ப்­ப­மு­றும் ஓர் இளம் பெண் அந்த அவ­மா­னத்­தால் தவ­றான முடி­வெ­டுத்து உயிரை மாய்த்­துக்­கொள்­வ­தால், இரண்டு உயிர்­கள் பலி­யா­கின்­றன. அவற்­றைப் பொறுப்­பா­க­வும், மதிப்பா கக­வும் கையாண்­டால் அந்­தச் சமூ­கம் இரண்டு உயிர்­க­ளைப் பாது­காத்­த­தாக அமை­யும். ஒரு பெண் முறை­த­வ­றிக் கர்ப்­ப­மு­று­வ­தைப் பழிக்­கின்­ற­வர்­கள் அவ்­வா­றான குழந்­தை­க­ளைச் சமூ­கத்­தில் நன்­நி­லைக்­குக் கொண்டு வரு­வதை ஒரு சவா­லாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ‘‘அது­தான் இறை­வ­னின் விதி’’ என மிகச் சாதா­ர­ண­மா கக் கூறிக் கடந்து விடு­வது தவ­றா­னது.

கர்ப்­பம் என்­பது கொடை
தமி­ழர்கள் கர்ப்­பம் என்­பதை ஒரு கொடை­யா­கக் கரு­து­வ­தாக இல்லை. கார்ப்­ப­முற்ற பெண்ணை ஆங்­கில நாட்­ட­வர்­கள் ‘சீ இஸ் இன் த வ்பமிலி வே’ அதா­வது அவள் அடுத்த சந்­த­தியை உரு­வாக்­கும் பணி­யில் ஈடு­பட்­டி­ருக்­கி­றாள் என்று ஒரு கர்ப்­பி­ணித் தாயைக் கௌர­விக்­கின்­ற­னர். ‘சுக­மில்­லா­மல் இருக்­கி­றாள்’ என்­ப­தில்லை. இந்­துக்­க­ளின் சம­யச் சடங்­கு ­க­ளால் அதிக மக்­கள் விர­தங்­கள் போன்­ற­வற்­றில் ஆரோக்­கி­ய­மான உண­வுப் பழக்­கத்­தைக் கைவிட்­டுள்­ள­னர்.

இத­னால், இயற்­கை­யா­கக் குழந்­தை­க­ளைப் பெற்­றுக்­கொள்­ளு­கின்ற உடல் ஆரோக்­கி­யம் இல்­லா­த­வர்­க­ளா­கக் காணப்­ப­டு­கின்­றர். இந்த நிலை விரை­வா­கச் சீர் செய்­யப்­பட வேண்­டும். பிள்­ளை­யைக் கட­வுள் தரு­வார் எனக் கடைசி வரை நம்­பி­யி­ருந்­தால், குழந்தை கிடைக்­கக்­கூ­டிய காலப்­ப­குதி வீணே கழிந்து விடு­கி­றது. இத்­த­கைய சூழ­லில் ஒரு குழந்­தை­யைத் தத்­தெ­டுத்து வளர்க்­கும் அவ­கா­ச­மும் இல்­லாது போய்­வி­டு­கி­றது.

பல தம்­ப­தி­யர் பொரு­ளா­தார ரீதி­யில் வள­மா­ன­வர்­க­ளாக இருந்து, அவர்­க­ளுக்­குக் குழந்­தை­கள் இல்­லாத நிலை­யில் மருத்­துவ பரி­சோ­த­னை­கள் மூலம் குழந்தை கிடைப்­ப­தற்கு வாய்ப்­பில்லை என்றும் தெரிந்­தால் ஒரு பிள்­ளை­யைத் தத்­தெ­டுக்­கும் முயற்­சி­யில் இறங்­கு­வ­தன் மூலம் தமது சொத்­துக்­க­ளை­யும் அவர்­க­ளது இறு­திக் காலத்­தை­யும் அனு­ப­விக்­கும் வாய்ப்பு ஏற்­ப­டும். எது­வுமே இல்லை என்­ப­தை­விட ஏதா­வது இருப்­பது நல்­லது என்று திருப்தி அடை­ யும் மன நிலையை மனி­தன் பெறு­வது என்­பது ஒரு வரம்­தான்.

சீத­னப் பிரச்­சினை
தமிழ்ச் சமூ­கத்­தில் குழந்­தைப்­பேறு இல்­லாது போவ­தற்கு அடிப்­ப­டை­யி­லுள்ள பிரச்­சினை சீத­ன­மா­கும். இத­னால், இள­வ­ய­துத் திரு­ம­ணங்­கள் தவிர்க்­கப்­பட்டு முதிர் வய­தில் திரு­ம­ணம் செய்து கொள்­வ­தால், பிள்­ளைப்­பேறு இல்­லாது போய்­வி­டு­கி­றது. அல்­லது மன வளர்ச்சி குன்­றிய பிள்­ளை­க­ளைப் பெறு­வ­தற்­கான வாய்ப்பே ஏற்­ப­டு­கி­றது. இவ்­வா­றான பிள்­ளை­க­ளால், பெற்­றோர் மிக அதி­க­மான மன அழுத்­தத்­தை­யும், சுமை­யை­யும் சாகும் வரை தாங்­க­வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கி­றது.

அதிக சீத­னம் வாங்­கித் திரு­ம­ணம் செய்ய நினைக்­கும் ஆண்­க­ளும், அதிக சீத­னத்தை வழங்க முடி­யாது திண்­டா­டும் பெண்­க­ளும் எதிர்காலத்தில் பிள்­ளை­க­ளைப் பெற­மு­டி­யாத தம்­ப­தி­க­ளாக மாறு­கின்­ற­னர். அல்­லது நோயுற்ற, நலி­வ­டைந்த குழந்­தை­க­ளைப் பெற்­றெ­டுக்­கின்­ற­னர். பொது­வா­கத் தமிழ் மக்­களை அவ­தா­னிக்­கும்­போது 300பெண்­க­ளுக்கு ஒரு கர்ப்­பி­ணித்­தா­யைக் காண்­பதே அரி­தா­க­வுள்­ளது. இது தமி­ழி­னத்­தின் வளர்ச்சி வீதத்தை மிகத்­தெ­ளி­வா­கக் காட்­டு­வ­தாக உள்­ளது.

அதே­வளை தற்­போ­தைய நிலை­யில் இள­வ­ய­துத் திரு­ம­ணம், இள­வ­ய­துப் பிள்­ளைப்­பேறு என்­பன அதி­க­ரித்­தி­ருப்­ப­தால், அதி­கம் மண­மு­றி­வு­கள் ஏற்­பட்டு பிரிந்து வாழும் நிலை­யும் காணப்­ப­டு­கின்­றது. வெளி­நாட்­டில் திரு­ம­ணம் செய்­கின்ற பல பெண்­க­ளுக்கு இந்த நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. கோவில்கள் கட்­டு­வ­தற்­குச் செல­வி­டு­கின்ற அதிக பணத்­தில் ஒரு தொகையை ஆவது, ஏழைப் பெற்­றோர்­கள் தமது பிள்­ளை­களை வளர்ப்­ப­தற்­கான அமைப்­புக்­களை உரு­வாக்க முயல்­வது சிறந் தது. இத்­த­கைய அமைப்­பின் மூலம் பிள்­ளை ­க­ளைத் தத்­தெ­டுக்க முய­லும் பெற்­றோ­ருக்­கும் உதவ முடி­யும். ஓர் இனம் தனது எதிர்­கா­லச் சந்­ததி பற்­றிச்­சிந்­திப்­பது மிக மிக அவ­சி­ய­மா­கும். இருப்­ப­தைப்­பே­ணிக்­கொள்­வது இப்­போ­தைக்­குப் போது­மா­னது.

You might also like