தனியார் காணியில் புதையல் தேடியவர்கள் கைது!!

அநுராதபுரம் கல்கிரியாகம – உல்பதகம பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிரியாகம பொலிஸார் இன்று அதிகாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கல்கரியாகம, நாச்சதுவ, தேவகூவ மற்றும் பலாகல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like