தனுஷின் அடுத்த படம் கர்ணன்!!

தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தனுஷ் தற்போது வெற்றிமாறனின் அசுரன் படத்திலும், துரை செந்தில் குமார் இயக்கத்தில் பட்டாஸ் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் கார்த்திக் சுப்புராஜ், இயக்கும் படத்தில் நடிகர் தனுஷ் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.

மாரி செல்வராஜ் – தனுஷ் இணையும் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.

You might also like