தவராசாவின் வீட்டுக்கு முன்னால் வீசப்பட்டது- பாவப்பட்ட பணப் பொதி!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய 7 ஆயிரம் ரூபா நிதியை மீளத் தருமாறு கோரியிருந்த நிலையில், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்,  7 ஆயிரம் பேரிடம் சேகரிக்கப்பட்ட  பணம் எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவின் வீட்டுக்கு முன்னால்  இன்று வீசப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வாரம் வீதி வீதியாக உண்டியல் ஏந்தி, தவராசா கோரிய நிதியைச் சேகரித்திருந்தனர். அந்த நிதியை இன்று  வடமாகாண சபையில் கையளிக்க முயற்சித்தனர்.

எனினும் அந்தப் பணத்தை பெற்றுக்கொள்ள வடமாகாண சபை மறுத்தது. அதனால் அந்த பணத்தை கொக்குவில் பகுதியில் உள்ள வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவரின் வீட்டுக்கு சென்று வாசலில் போட்டுவிட்டுச் சென்றனர் மாணவர்கள் எனக் கூறப்படுகிறது.

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கொழும்பில் இருப்பதனால், வடமாகாண சபையின் அமர்வில் அவர் இன்று கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close