side Add

தாமரைக் கோபுரத்திலிருந்து விழுந்த இளைஞனின்- உடலைக் கொண்டு வர ரூ.30 ஆயிரம்- உறவினர்கள் கவலை!!

தாமரைக் கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்த கிளிநொச்சி இளைஞன் கோணேஸ்வரன் நிதர்சனின் உடலை கிளிநொச்சிக்கு இலவசமாக கொண்டு வருவதாக தெரிவித்து, பின்னர் 30 ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொண்டுள்ளதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனின் உடலை கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு வருவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வாகனத்தை இலவசமாக ஏற்பாடு செய்து தருவதாக பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் சற்று தாமத்தித்து மாணவனின் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு பிரதேச சபை உறுப்பினர் வாகனத்திற்கான எரிபொருளை மாத்திரம் வழங்குமாறு கோரியிருந்தார். இதற்கு குடும்பத்தினர் சம்மத்தித்திருந்தனர்.

இதன் பின்னர் வாகனம் கொழும்பு சென்று மாணவனின் உடலை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி அக்கராயன்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து சேர்ந்த பின்னர் வாகனக் கூலியாக 30 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு கூறி பணத்தையும் பெற்றுச் சென்றுள்ளனர்.

வழமையாக கொழும்பிலிருந்து கிளிநொச்சி இவ்வாறான ஒரு தேவைக்கு வாகனத்தைப் பிடிப்பதாக இருந்தால் 20 ஆயிரம் ரூபா முடிந்திருக்கும். இதனை விட தங்களின் நிலமையினை கருத்தில் கொண்டு பலர் இளைஞனின் உடலை கொண்டு வருவதற்கு உதவத் தயாராக இருந்த நிலையில் இவர்கள் இப்படி நடந்து கொண்டது கவலையளிக்கிறது என உறவினர்கள் தெரிவித்தனர்..

ஆரம்பத்திலேயே தங்களிடம் உண்மையை கூறியிருந்தால் தாங்கள் அதற்கேற்ற ஒழுங்கை மேற்கொண்டிருப்போம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like
X