தாயின் சடலத்துடன் – 6 நாள்கள் தங்கியிருந்த சிறுமி!!

உறங்குவதாக நினைத்து தாயின் சடலத்துடன் சிறுமி ஒருவர் காத்திருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் பிரான்ஸ் பெர்பிங்கன் நகரில் நகரில் நடந்துள்ளது.

சிறுமியின் வீடு அமைந்துள்ள கட்டடத்தின் அருகில் வசிப்பவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அங்கு மூன்றரை வயது சிறுமி குடியிருப்பில் தனியாக இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சிறுமியின் தாயார் குளியலறையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

சிறுமியிடம் தாயார் குறித்து விசாரித்த போது, தனது தாயார் உறங்கிக் கொண்டிருப்பதாக சிறுமி பதிலளித்துள்ளார்.

You might also like