side Add

தாலிக்குளம் வீதி தற்காலிகமாகச் சீரமைப்பு!!

வவுனியா தாலிக்குளம் வீதி தற்காலிகமாக செப்பனிடப்பட்டு வருகின்றது.

குறித்த வீதி நீண்ட காலமாகத் திருத்தப்படாத நிலையில் போக்குவரத்தை மேற்கொள்ளும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வந்திருந்தனர்.

அதற்கமைய கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் வேண்டுகோளிற்கிணங்க சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியச் செயலாளருமான மயூரக்குருக்கள் நிதியுதவி வழங்கியுள்ளார்.

2 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதி தற்காலிகமாக போக்குவரத்துச் செய்யும் வகையில் கிரவல் இடப்பட்டு செப்பனிடப்பட்டு வருகின்றது.

You might also like