தியாகி திலீபனின் நினைவேந்தலை -நல்லூரில் நடத்தத் தடையில்லை!!

தியா­க­தீ­பம் திலீ­பனின் நினை­வேந்­தல் நிகழ்­வுக்கு தடை­வி­திக்க வேண்­டும் என்­றும், நல்­லூரில் அமைந்­துள்ள தூபியை அகற்றவேண்­டும் என்று கோரியும் பொலி­ஸார் தாக்­கல் செய்­தி­ருந்த மனுவை யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன்­றம் நிரா­க­ரித்­தது. தியா­க­தீ­பம் திலீ­பன் நினை­வேந்­தல் நிகழ்­வு­களை நடத்த அனு­ம­தித்­தது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை பொலி­ஸார் இந்த மனு­வைத் தாக்­கல் செய்­தி­ருந்­த­னர். இந்த மனு மீதான கட்­டளை இன்று பிற்­ப­கல் 2 மணிக்கு வழங்­கப்­பட்­டது.

பொலி­ஸா­ரின் விண்­ணப்­பம்
யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன்­றில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை முன்­னி­லை­யான யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலைய தலை­மைப் பொலிஸ் பரி­சோ­த­கர் மற்­றும் யாழ்ப்­பா­ணப் பிராந்­திய உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் விண்­ணப்­பத்தை முன்­வைத்­த­னர்.

யாழ்ப்­பா­ணம் நல்­லூர் பின் வீதி­யில், இலங்­கை­யி­லும் உலக நாடு­க­ளி­லும் தடை செய்­யப்­பட்ட அமைப்­பான தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் உறுப்­பி­ன­ரான லெப்­ரி­னன் கேணல் திலீ­பன் என்று அழைக்­கப்­ப­டும் இரா­சையா பார்த்­தீ­பன் என்­ப­வரை நினைவு கூர்­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன என்று பொலிஸ் புல­னாய்­வுத் தக­வல்­கள் மூலம் அறி­யக் கிடைத்­துள்­ளது.

நினை­வுத் தூபி­யைச் சுற்றி இரும்­புக் கம்பி வேலி அமைக்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு அரு­கா­மை­யில் பந்­தல் போடப்­பட்டு திலீ­ப­னின் ஒளிப்­ப­டங்­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன. திலீ­ப­னின் நினை­வு­கூ­ரலை நடத்­தத் தடை உத்­த­ரவு வழங்­க­வேண்­டும்.

மாந­கர எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­யில் அந்­தச் சபை­யின் ஆணை­யா­ள­ரின் அனு­மதி பெறப்­ப­டா­மல் சட்­ட­வி­ரோ­த­மாக இரும்­புக் கம்­பி­க­ளால் வேலி­கள், பந்­தல்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றை அந்­தப் பகு­தி­யி­லி­ருந்து அகற்­று­வ­தற்கு யாழ்ப்­பாண மாந­கர சபை­யின் ஆணை­யா­ள­ருக்கு உத்­த­ர­வி­ட­வேண்­டும் என்று விண்­ணப்­பம் செய்­தி­ருந்­த­னர்.

வழக்கு ஆரம்­பம்
வழக்கு இன்றைய தினத்­துக்கு திக­தி­யி­டப்­பட்­டி­ருந்­தது. யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஆணை­யா­ள­ரை­யும் மன்­றில் முன்­னி­லை­யா­கக் கட்­ட­ளை­யிட்­டி­ருந்­தது. நீதி­வான் சின்­னத்­துரை சதீஸ்­க­ரன் முன்­னி­லை­யில் வழக்கு இன்று விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.

மாந­க­ர­ச­பை­யின் சட்­டத்­த­ரணி ராஜ­ரட்­ணத்­து­டன் மாந­கர சபை சார்­பில் அரச தலை­வர் சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­தி­ரன் மற்­றும் கேச­வன் சயந்­தன், கணா­தீ­பன் ஆகி­யோர் முன்­னி­லை­யா­கி­னர்.

வழக்­குத் தொடு­நர் தரப்­பில் யாழ். பிராந்­திய உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர், யாழ். பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரி­சோ­த­கர் ஆகி­யோர் முன்­னி­லை­யா­கி­யி­ருந்­த­னர்.

தெளி­வில்லை
இந்த வழக்­கில் ஆணை­யா­ளர் எதற்கு அழைக்­கப்­பட்­டுள்­ளார் என்­பது தொடர்­பாக தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­தி­ரன் மன்­றில் குறிப்­பிட்­டார். வழக்­குத் தொடர்­பாக மன்­றில் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டது.

அதைத் தொடர்ந்து மேல­திக அறிக்கை தாக்­கல் செய்த பொலி­ஸார், குற்­ற­வி­யல் நட­வ­டிக்கை கோவை பிரிவு 98 மற்­றும் 106 ஆம் பிரி­வின் கீழ் எரி, பாதை, குளம் போன்­ற­வற்­றைத் தடுக்­கும் வகை­யில் மேற்­கொள்­ளப்­ப­டும் சட்­ட­வி­ரோத கட்­டங்­களை அகற்­ற­வேண்­டும் என்று மன்­றுக்கு விண்­ணப்­பம் மேற்­கொண்­ட­னர்.

நல்­லி­ணக்­கத்­துக்கு குந்­த­கம்
யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை எல்­லைக்கு உட்­பட்ட நல்­லூர் பின் வீதி­யில் சபை­யின் அனு­மதி இல்­லா­மல் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளது உறுப்­பி­ன­ரான லெப்­ரி­னன் கேணல் இரா­சையா பார்த்­தீ­ப­னது படம் பொறிக்­கப்­பட்டு அவர் உணவு ஒறுப்­பில் ஈடு­பட்­டி­ருந்த படம் ஆறடி உய­ரத்­தில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­தச் செயற்­பா­டா­னது தேசிய நல்­லி­ணக்­கத்­துக்கு குந்­த­கத்தை ஏற்­ப­டுத்­தும்.

இன­வா­தம், மத­வா­தம் துண்­டும் வகை­யி­லும், தமிழ் மக்­கள் மன­தில் இன­வா­தத்தை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் உள்­நாட்டு வெளி­நாட்டு உல்­லாச பய­ணி­க­ளுக்கு குழப்­பம் ஏற்­ப­டுத்­தும் வகை­யில் இது உள்­ளது.

சிங்­கள மக்­க­ளும் வடக்­குக்கு வரும் நிலை­யில் வடக்கு மக்­க­ளுக்­கும் தென்­னி­லங்கை மக்­க­ளுக்­கும் இடையே குழப்­ப­மான நிலமை ஏற்­பட வாய்ப்­புள்­ளது. பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் இலங்­கை­யி­லும் உலக நாடு­க­ளி­லும் தடை­செய்­யப்­பட்ட அமைப்பை சேர்ந்த ஒரு­வரை நினைவு கூரு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

பொது மக்­க­ளது வரிப் பணத்­தில் ஊதி­யம் பெறும் அரச அதி­கா­ரி­கள் இலங்­கை­யின் அர­ச­மைப்பை மீற­மாட்­டோம் என்று உறுதி எடுத்­த­வர்­கள் என்று மன்­றில் சுட்­டிக்­காட்­டிய பொலி­ஸார், கட்­டங்­கள் அகற்­றப்­ப­ட­வேண்­டும் என்­ப­தை­யும், நிகழ்­வுக்­குத் தடை விதிக்க வேண்­டும் என்­ப­தை­யும் குறிப்­பிட்­டார்­கள்.

அரசே அனு­மதி வழங்­கி­யது
மாந­க­ர­சபை சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­தி­ரன் நல்­லூ­ரில் அமைந்­துள்ள தூபி­யைச் சுற்றி அமைக்­கப்­பட்ட வேலி தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறீ­த­ர­னின் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதி­யில் மேற்­கொள்­ளப்­பட்­டது.

அந்­தப் பணியை மாந­கர சபையே முன்­னெ­டுத்­தி­ருந்­தது. நினை­வுத் தூபி அமைக்க எனக்கு அரசு நிதி ஒதுக்­கி­யுள்­ளது. அரசு இவற்றை நிறை­வேற்ற அனு­மதி வழங்­கி­யுள்­ளது என்று குறிப்­பிட்ட சுமந்­தி­ரன் அதற்­கான ஆவ­ணங்­க­ளை­யும் காண்­பித்­தார்.

வேலி அமைக்­கும் நட­வ­டிக்கை மாந­கர சபை அமர்­வு­க­ளில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்­க­ளின் அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­ளப்­பட்­டது. அதற்கு மாந­கர மேயரே பொறுப்பு. ஆணை­யா­ளர் அல்ல என்­றும் சுட்­டிக்­காட்­டி­னார். அரசு அனு­மதி வழங்­கி­யதை பொலி­ஸார் சட்­ட­வி­ரோ­தம் என்று குறிப்­பி­டு­வதை ஏற்க முடி­யாது என்­றும் வாதிட்­டார்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளி­ட­மி­ருந்து மீட்­கப்­பட்ட ஆயு­தங்­கள், கப்­பல்­கள், பதுங்கு குழி­கள், வீடு­கள் என்­ப­வற்றை அரசு காட்­சிப்­ப­டுத்­தி­யுள்­ளது. அவற்­றைப் பெரு­ம­ள­வான சிங்­கள மக்­கள் வந்து பார்­வை­யி­டு­கின்­றார்­கள். அப்­ப­டி­யி­ருக்­கை­யில் திலீ­ப­னின் நினை­வுத் தூபி எப்­படி நல்­லி­ணக்­கத்­துக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின் கீழ் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்பு தடை செய்­யப்­பட்­டுள்­ளது. அந்த அமைப்பை இங்கு நினை­வு­கூ­ர­வில்லை. அகிம்சை வழி­யில் போராடி உயிர்­நீத்த மகாத்மா காந்­தி­யைப் போன்று உணவு ஒறுப்­புப் போராட்­டம் நடத்தி உயி­ரி­ழந்­த­வரை நினை­வு­கூ­ரு­வது எந்த வகை­யில் பாதிப்­பாக அமை­யும் என்று சுமந்­தி­ரன் தனது விண்­ணப்­பத்தை முன்­வைத்­தார்.

இரு தரப்பு வாதங்­கை­யும் கவ­னத்­தில் எடுத்த மன்று, வழக்கு மீதான கட்­டளை 2 மணிக்­குப் பிறப்­பிக்­கப்­ப­டும் என்று அறி­வித்­தது.

கட்­டளை
நீதி­வான் கட்­டளை உத்­த­ரவை திறந்த நீதி­மன்­றில் அறி­வித்­தார். சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­தி­ர­னது விண்­ணப்­பத்­தில் குறிப்­பிட்ட விட­யங்­க­ளைச் சுட்­டிக்­காட்டி இந்­தச் செயற்­பாட்டை சட்­டத்­துக்கு முர­ணான செயற்­பா­டாக கணிக்க முடி­யாது என­வும் அரச நிதி வழங்­கப்­பட்டு அதில் அமைக்­கப்­பட்ட வேலி­கள் போன்­ற­வற்றை அகற்ற உத்­த­ர­விட முடி­யாது என­வும் குறிப்­பிட்டு பொலி­ஸா­ரின் விண்­ணப்­பத்தை மன்று நிரா­க­ரித்­தது.

இந்த வழக்­கில் பொலி­ஸார் இலங்கை தண்­டனை சட்­டக் கோவை­யின் பிரிவு 120 கீழ் தடை செய்­யப்­பட்ட பயங்­க­ர­வாத அமைப்­பாக குறிப்­பிட்டு முதல் நிலை வழக்­காக தாக்­கல் செய்­துள்­ள­தால், அது தொடர்­பான மேல­திக விசா­ரணை தக­வல்­களை எதிர்­வ­ரும் வழக்கு தவ­ணை­யான ஒக்­ரோ­பர் 29ஆம் திகதி மன்­றுக்கு சமர்ப்­பிக்க வேண்­டும் என்­றும் மன்று பொலி­ஸா­ருக்கு அறி­வு­றுத்­தி­யது.

மன்­றின் மறுப்பு
இதே­வேளை, சட்­டத்­த­ரணி கு.குரு­ப­ரன் தலை­மை­யி­லான சட்­டத்­த­ர­ணி­கள் மன்­றில் வாதம் இடம்­பெற்­ற­போது தமது கருத்தை முன்­வைத்­த­னர். இதன்­போது நீதி­வான் அவர்­க­ளைப் பார்த்து, யார் சார்­பாக மன்­றில் முன்­னி­லை­யா­கி­யுள்­ளீர்­கள் என்று கேள்வி எழுப்­பி­னார். தாம் பாதிக்­கப்­பட்ட தரப்­பின் சார்­பில் முன்­னி­லை­யா­ன­தா­கத் தெரி­வித்­த­னர். யார் பாதிக்­கப்­பட்ட தரப்பு என்று மன்று வின­விய போது கரி­சனை உள்ள தரப்பு என்று தெரி­வித்­த­னர்.

இந்த வழக்கு தொடர்­பாக கட்­டளை ஆக்­கப்­ப­டும் போது தமது சமர்ப்­ப­ணங்­களை கவ­னத்­தில் எடுக்க வேண்­டும் என­வும், ஏனெ­னில் கட்­ட­ளை­யாக்­கப்­பட்ட பின்­னர் குறித்த கட்­ட­ளை­யால் பாதிக்­கப்­ப­டும் தரப்­பா­னது மீண்­டும் நீதி­மன்றை நாடு­வ­தற்­கான கால அவ­கா­சம் இல்லை என­வும் எனவே தமது விண்­ணப்­பத்தை மன்று ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என­வும் தெரி­வித்­த­னர்.

இதற்கு மன்­றா­னது மாந­கர சபை­யின் ஆணை­யா­ளர் தரப்பை மாத்­தி­ரம் கேட்டு கட்­ட­ளை­யாக்­கப்­ப­ட­லாம் என­வும் கட்­டளை ஆக்­கப்­ப­டாத பட்­சத்­தில், கட்­ட­ளை­யால் பாதிக்­கப்­ப­டு­வது யார் என்­பது தெளி­வில்­லாத பட்­சத்­தில் கட்­டளை தொடர்­பாக மாந­கர சபை அல்­லாத வேறு சட்­டத்­த­ர­ணி­கள் தோன்ற முடி­யாது என்று தெரி­வித்து அவர்­க­ளது கோரிக்­கையை நிரா­க­ரித்­தது.

சந்­தர்ப்­பம் தவ­றி­விட்­டது
இந்த விட­யம் தொடர்­பில் தனது முக­நூ­லில் கருத்து வெளி­யிட்­டுள்ள கு.குரு­ப­ரன், மாந­கர சபை­யின் தீர்­மா­னத்­தின் பெய­ரில் நிகழ்­வு­கள் நடப்­ப­தாக மன்­றில் வாதி­டப்­பட்­டது. இது இந்த நிகழ்­வு­கள் சட்ட பூர்­வ­மா­னவை என்­பதை காட்­டு­வ­தா­க­வும் வாதங்­கள் முன்­வைக்­கப்­பட்­டன.

மேயர் ஆனோல்­டின் (நாம் தான் செய்­வோம் வேறு யாரும் செய்ய முடி­யாது) அறி­விப்­பில் இருந்து இன்று மன்­றில் இடம்­பெற்ற வாதங்­கள்­வரை திலீ­பன் அண்­ணா­வின் நினை­வி­டத்­தை­யும் அங்கு அஞ்­சலி நிகழ்வு நடத்­து­வ­தை­யும் மாந­கர சபை­யின் ஏக போக உரி­மைக்­குள் கொண்டு வந்து நினை­வு­கூ­ரலை பொதுப் பரப்­பில் இருந்து குறுக்­கும் செயற்­பாட்­டின் உச்­சம் என்­பதை விளங்­கிக்­கொள்ள வேண்­டும்.

இது கூட்­ட­மைப்பு செய்­தா­லும் பிழை. முன்­னணி செய்­தா­லும் பிழை. முத­ல­மைச்­சர் செய்­தா­லும் பிழை. அரச அதி­கா­ரம் நினைவு கூரலை ஒழுங்­கு­ப­டுத்­து­வதை ஒரு போதும் ஏற்க முடி­யாது. அரச அதி­கா­ரம் நினை­வுச் செயற்­பா­டு­களை வச­திப்­ப­டுத்­த­லாம்.

ஆனால் உடைமை கொள்ள முடி­யாது.மன்­றில் மாந­கர சபை­யின் சட்­டத்­த­ர­ணி­கள் கவ­ன­மா­கத் தவிர்த்த விட­யம், விடு­த­லைப் புலி­கள் உறுப்­பி­னர்­களை நினைவு கூர­லாமா என்­பது தொடர்­பி­லான கேள்­வியை. எம்­மை­யும் தவிர்க்­கு­மாறு ஆலோ­சனை வழங்­கி­னர். அதை நீதி­மன்­றில் பிரச்­ச­னை­யாக்­கு­வது முக்­கி­ய­மா­னது. அதற்­கான வாய்ப்பு இன்று இழக்­கப்­பட்­டுள்­ளது. இதை வாதாடி நீதி­மன்­றம் அனு­ம­திக்­குமா என்­பது இங்கு முக்­கி­ய­மல்ல. ஏன் நாம் இந்த கேள்­வியை கேட்­ப­தில்லை என்­பதே முக்­கி­ய­மா­னது.

நாம் மன்­றில் தோன்றி அக்­க­றை­யுள்ள தரப்பு என்ற வகை­யில் எமது தரப்பை கேட்க வேண்­டும் என்று வாதா­டி­னோம். இது மாந­கர சபை­யின் காணிப் பிரச்­சினை அல்ல என்று நிலைப்­பாடு எடுத்­தோம். பொது மக்­க­ளின் நினைவு கூரும் உரி­மையை பற்­றி­யது. அதை­யும் கேளுங்­கள் என்று சொல்லி பார்த்­தோம். மன்று ஏற்­க­வில்லை.

இப்­ப­டி­யான வழக்­கு­க­ளில் யார் தோன்­ற­லாம் என்­பது விசா­ல­மாக பார்க்­கப்­ப­டு­வது வழமை. ஆனால் எனது காணி­யில் அமைக்­கப்­பட்ட கட்­ட­டம் சட்ட பூர்­வ­மாக கட்­டப்­பட்­டதா என்ற தோர­ணை­யில் வழக்கு முடி­வ­டைந்­தி­ருக்­கி­றது என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

You might also like