திருநெல்வேலி சந்தையால்- நல்லூர் பிரதேச சபைக்கு அவமானம்!!

0 75

கூட்டரசால் நாட்டில் ஒரே இரவில் தலைமை அமைச்சரை மாற்ற முடியும் என்றால், ஓர் பிரதேச சபையால் சந்தை வியாபாரியைக் கட்டுப்படுத்த முடியவில்லை? இது சபை ஆளுமையற்ற செயற்பாட்டை வெளிக்காட்டுகின்றது என்று நல்லூர் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் குகானந்தன் தெரிவித்தார்.

நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதில் திருநெல்வேலி சந்தையில் நடைபாதை வியாபாரிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.

்சந்தையில் அதிகாரமாகச் செயற்படும் வியாபாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை .இது சபையின் இயலாமையையே வெளிப்படுத்துகின்றது. இன்று ஓர் வியாபாரி அராஜகத்தில் ஈடுபடுவார் அவரை பார்த்து ஏனையவர்களும் பின்னால் தொடர்வார்கள். எனவே உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அத்துடன் திருநெல்வேலி சந்தையில் இனிவரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத வகையில் ஆக்க பூர்வமான நடவடிக்கைஎடுக்க வேண்டும்“ என்று உறுப்பினர் குகானந்தன் தெரிவித்தார்.

“திருநெல்வேலி சந்தையிலும் கழிவு முறையை நீக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. நிலத்துக்கு கீழே விளையும் பயிர்களுக்கு மட்டுமே 10 க்கு 1 கழிவு உள்ளது. ஆ னால் இங்கு அனைத்து உற்பத்திப் பொருள்களுக்கும் கழிவு அறவிடப்படுகின்றது.அத்துடன் வியாபாரிகளிடம் கொள்வனவு செய்யும் போது ஓர் பெறுமதியை கூறிவிட்டு பொருளை விற்பனைக்கு வைத்துவிட்டு பேசிய பெறுமதியை விட குறைந்த பணத்தைக் கொடுக்கின்ற கேவலமான செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. எனவே இதனையும் கவனத்தில் எடுக்க வேண்டும்“ என்று உறுப்பினர் சிவலோசன் சபையில் தெரிவித்தார்.

You might also like