திருப்பதியில் தீ விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!!

இந்தியா ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி 4 பேர் இறந்தனர். இந்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பதியில் இருந்து 25 கி.மீற்றர் தொலைவில் உள்ளது மடிபாகா கிராமம். இப்பகுதியை சேர்ந்த சீனிவாசரெட்டி. இவரது பூட்டிய வீடு தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு விரைந்த மீட்பு படையினர் தீயை அணைத்து வீட்டுக்குள் சென்ற போது சீனிவாசன் , அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் கருகிய பிணமாக கிடந்தனர். தீ பிடித்ததன் காரணம் குறித்து ஏதும் அறியப்படவில்லை. விபத்தா ? தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்

You might also like