தீப்பெட்டி தொழிற்சாலையில் நடந்த சோகம்!!

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

100க்கும் மேற்பட்டவர்கள் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளை, திடீரென பரவிய தீ தொழிற்சாலை முழுவதும் பரவியது. தொழிலாளர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயைக் கட்டுப்படுத்தியதுடன்., காயமடைந்த தொழிலாளர்களை வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

You might also like