தீர்வு வரும் நாளே சுதந்­திர தினம்!!

71 ஆவது சுதந்­திர தினத்­தைக் கொழும்பு இன்று காலி முகத் திட­லில் கோலா­க­ல­மா­கக் கொண்­டா­டு­கின்­றது. சுதந்­திர தினத்­தைக் கோலா­க­ல­மா­கக் கொண்­டா­டும் ஏற்­பா­டு­கள் கொழும்­பில் மும்­மு­ர­மாக நடந்­து­கொண்­டி­ருந்­த­போது, வடக்­கில் அதைத் துக்க நாளாக அறி­வித்து – கறுப்­புப் பட்டி அணிந்து போராட அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

முல்­லைத்­தீ­வில் இரு ஆண்­டு­க­ளா­கத் தமது பூர்­வீ­கக் காணி­க­ளுக்­காக தொடர்ந்து போராட்­டம் நடத்­தி­வ­ரும் கேப்­பா­பி­லவு மக்­கள் போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­துள்­ள­னர். யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­ய­மும் சுதந்­திர தினத்­தைக் கறுப்பு தின­மாக அறி­வித்­துள்­ளது. தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் எவை­யும் தீர்க்­கப்­ப­ட­வில்லை. அவற்­றைத் தீர்ப்­ப­தற்­காக ஆட்­சி­யா­ளர்­கள் எடுக்­கும் நட­வ­டிக்­கை­கள் திருப்­தி­ய­ளிப்­ப­ன­வாக இல்லை என்­ப­தைச் சுட்­டியே சுதந்­திர தினத்­தைக் கறுப்பு தின­மாக அறி­வித்­துள்­ள­னர்.

சுதந்­திர தினத்­துக்­கான ஏற்­பா­டு­கள் தெற்­கில் பெரும் எடுப்­பில் நடந்­தி­ருந்­தன. ஆனால் தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் அவற்­றைக் காண­மு­டி­ய­வில்லை. போரை முடி­வுக்­குக் கொண்டு வந்­தி­ருந்­தா­லும் தமிழ் மக்­க­ளின் மனங்­களை வெல்­லும் வகை­யில் நடந்­து­கொள்­ள­வில்லை, ஆயு­தப் போராட்­டம் முடி­வுக்­குக் கொண்­டு­வந்­தா­லும் நாடு பிள­வு­ பட்­டுக் கிடக்­கின்­றது, நாட்டை ஒன்­று­மைப்­ப­டுத்தி பிள­வு­ப­டாத நாட்டை உரு­வாக்க ஆட்சி மாற்­றம் தேவை என்­றெல்­லாம் பரப்­புரை செய்து ஆட்­சிக்கு வந்த மைத்­திரி – – ரணில் அர­சும் மக்­க­ளின் மனங்­களை வெற்­றி­கொள்­ளும் முயற்­சி­யில் தோல்வி அடைந்­து­விட்­டது என்­ப­தையே இவை புலப்­ப­டுத்­து­கின்­றன.

தமது பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிட்­டும் என்ற நம்­பிக்­கை­யு­ட­னேயே தமிழ் மக்­கள் மைத்­திரி -– ரணில் கூட்­டுக்கு வாக்­க­ளித்­த­னர். அந்­தக் கூட்டு அரசு பதவி வகித்த 3 ஆண்­டு­க­ளில் தமி­ழர் விட­யத்­தில் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. கூட்டு அரசு உடைந்­துள்ள நிலை­யில் தமிழ் மக்­க­ளின் நம்­பிக்­கை­யைச் சித­ற­டிக்­கும் வகை­யில் தெற்­கின் அண்­மைய செயற்­பா­டு­கள் உள்­ளன.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு திசை­யி­லும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மறு­பு­றத்­தி­லும் பய­ணிக்க, புதிய அர­ச­மைப்­பின் நிலமை என்­ன­வென்று தெரி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. மறு­பு­றத்­தில் மகிந்த ராஜ­பக்ச இன­வா­தத்­தைக் கையி­லெ­டுத்து புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ரா­கக் கள­மி­றங்­கி­யுள்­ளார். தமிழ் மக்­க­ளின் நம்­பிக்கை சித­ற­டிக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டை ஒன்­று­மைப்­ப­டுத்­த­வும், தமிழ் மக்­க­ளின் மனங்­களை வெற்­றி­கொள்­ள­வும் தமக்­குக் கிடைத்த ஒரு சந்­தர்ப்­பத்தை தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளும் தவ­ற­விட்­டுள்­ள­னர். தெற்­கின் கோலா­க­ல­மும், வடக்­கின் துக்க நிலை­யும் இதையே எடுத்­தி­யம்­பு­கின்­றன.

தமிழ் மக்­க­ளின் நீண்­ட­கால அர­சி­யல் பிரச்­சி­னை­க­ளுக்கு இன்­ன­மும் தீர்வு கிட்­ட­வில்லை, இரா­ணு­வம் வச­முள்ள காணி­கள் முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­ட­வில்லை, அர­சி­யல் கைதி­க­ளின் விடு­விப்­புச் சாத்­தி­ய­மா­க­வில்லை, காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பில் முடி­வே­து­மில்லை என்று தமி­ழர்­க­ளின் அதி­ருப்தி வரிசை நீட்­டிச் செல்­கின்­றது. சுதந்­திர தினத்­தைக் கறுப்பு நாளா­கக் கடைப்­பி­டிக்­கும் அறி­விப்பு தமிழ் மக்­கள் இன்­ன­மும் நாட்­டி­லில் இருந்து பிள­வு­பட்டே இருக்­கின்­ற­னர், அவர்­க­ளின் மனங்­களை வெல்ல ஆட்­சி­யா­ளர்­கள் செய்­தவை போது­மா­னவை அல்ல என்­ப­தையே சுட்டி நிற்­கின்­றது.

ஆட்­சி­யா­ளர்­கள் இந்த விட­யத்­தைச் சரி­யாக அணு­கித் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­யைத் தீர்க்­க­வில்லை எனில் அதுவே எதிர்­கா­லத்­தில் புதிய பிரச்­சி­னை­க­ளைத் தோற்­று­வித்­து­வி­டும். தமி­ழர்­க­ளின் அன்­றா­டப் பிரச்­சி­னைக்கு உட­ன­டித் தீர்­வை­யும், நீண்­ட­கா­லப் பிரச்­சி­னைக்­கான தீர்­வை­யும் முன்­வைக்க வேண்­டும். அப்­படி முன்­வைக்­கப்­ப­டும் நாளே இலங்­கை­யின் உண்­மை­யான சுதந்­திர தின­மாக இருக்­கும் என்­ப­தையே இந்­தச் சுதந்­திர தினம் உணர்த்­து­கின்­றது.

You might also like