side Add

தீவுகளுக்கு பங்களாதேஷ் பேரதிர்ச்சி!!

மேற்­கிந்­தி­யத் தீவு­க­ளுக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் ஆட்­டத்­தில் 64 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்று இரண்டு ஆட்­டங்­க­ளைக் கொண்ட தொட­ரில் 1:0 என்ற அடிப்­ப­டை­யில் முன்­னி­லை­யில் உள்­ளது பங்­க­ளா­தேஷ் அணி.

மேற்­கிந்­தி­யத் தீவு­கள் அணி பங்­க­ளா­தே­ஷூக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளது. இந்த இரண்டு அணி­க­ளுக்­கும் இடை­யி­லான இரண்டு ஆட்­டங்­க­ளைக் கொண்ட டெஸ்ட் தொட­ரின் முத­லா­வது ஆட்­டம் சிட்­ட­கொங்­கில் கடந்த வியா­ழக்­கி­ழமை ஆரம்­ப­மா­னது.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற பங்­க­ளா­தேஷ் அணி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டத் தீர்­மா­னித்­தது. அந்த அணி 324 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. அதி­க­பட்­ச­மாக கக்­கியூ 120 ஓட்­டங்­க­ளை­யும், கையிஸ் 44 ஓட்­டங்­க­ளை­யும், தயுல் இஸ்­லாம் ஆட்­ட­மி­ழக்­கா­மல் 39 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் கபி­ரி­யேல், வரிக்­கன் இரு­வ­ரும் தலா 4 இலக்­கு­க­ளை­யும், பிஸ்கூ, றோச் இரு­வ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.
பதி­லுக்­குத் தனது முத­லா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்த மேற்­கிந்­தி­யத் தீவு­கள் அணி 246 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. அதி­க­பட்­ச­மாக டவ்­ரிச் ஆட்­ட­மி­ழக்­கா­மல் 63 ஓட்­டங்­க­ளைக் குவித்­தார். அவரை விட ஹெட்­ம­யர் 63 ஓட்­டங்­க­ளை­யும், சேஸ் 31 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் நஜீம் ஹசன் 5 இலக்­கு­க­ளை­யும், சகிப் அல் ஹசன் 3 இலக்­கு­க­ளை­யும், மிராஸ், இஸ்­லாம் இரு­வ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.
பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய பங்­க­ளா­தேஷ் அணி இரண்­டா­வது இன்­னிங்­ஸில் மிகை­யான தடு­மாற்­றம் காட்­டி­யது. அந்த அணி நேற்­று­முன்­தினம் இரண்­டா­வது நாள் முடி­வில் 5 இலக்­கு­களை இழந்து 55 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்­தது. ரகிம் 11 ஓட்­டங்­க­ளு­ட­னும், மிராஸ் ஓட்­ட­மெ­தை­யும் பெறாத நிலை­யி­லும் மூன்­றாம் நாளுக்­காக நேற்­றுக் கள­மி­றங்­கி­னார்­கள். 125 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது பங்­க­ளா­தேஷ் அணி.

பந்­து­வீச்­சில் பிஸ்கூ 4 இலக்­கு­க­ளை­யும், சேஸ் 3 இலக்­கு­க­ளை­யும், வரிக்­கன் 2 இலக்­கு­க­ளை­யும், கபி­ரி­யேல் ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.
மேற்­கிந்­தி­யத் தீவு­கள் அணிக்கு 204 ஓட்­டங்­கள் இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது. அந்த அணி 139 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­ததை அடுத்து 64 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்­றது பங்­க­ளா­தேஷ்.
பந்­து­வீச்­சில் தயுல் இஸ்­லாம் 6 இலக்­கு­க­ளை­யும், மிராஸ், சகிப் அல் ஹசன் இரு­வ­ரும் தலா 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னார்­கள்.

You might also like