துறவற வாழ்வை வெளிப்படுத்திய- 12 அருட்சகோதரிகள்!!

இந்தியா, இலங்கை நாட்டைச் சார்ந்த புனித யோசவ்வாஸ் கன்னியர் சபையைச் சார்ந்த 12 அருட்சகோதரிகளுக்கு துறவற வாழ்வின் நித்திய வாக்குத்தத்தங்கள் இன்று வழங்கப்பட்டன.

மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் முப்படைகளின் பலத்த பாதுகாப்புடன் நிகழ்வு நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் நிகழ்வுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும்சபையின் தலைவி அருட்செல்வி.மேரி டாலர்
ஆகியோர் முன்னிலையில் வாக்குத்தத்தங்கள் வழங்கப்பட்டன.

You might also like