தெரிவுக் குழுவில் இராணுவத் தளபதி சாட்சியம்!!

“பிரபாகரன் உயிரிழந்ததுடன், விடுதலைப் புலிகள் கட்டமைப்பு முழுமையாக செயலிழந்தது. ஆனால் தற்போதுள்ள பயங்கரவாதம் அவ்வாறு கிடையாது“ என்று இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் இராணுவத்தளபதி இன்று சாட்சியம் வழங்கினார்.

புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஓரிருவரை கைது செய்தமையால் முழுப் புலனாய்வு பிரிவும் சரிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. போர்க் காலத்தில் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த பலர் இறந்தனர். அவர்களின் இறப்புப் படைத்தரப்பை சரிவடைய செய்யவில்லை. என்று அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

You might also like