தேர்தலில் போட்டியிடுபவர்களுடன்- கூட்டமைப்பு நேரடியாக பேச்சு நடத்தும்!!

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து தரப்புக்களுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபடும் என்று தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தமிழ் மக்களுக்கு நாம் என்னென்ன தேவை எனக் கோருகின்ற போது, அவற்றை நாம் செய்வோம் எனக் கூறுபவர்களுக்கும், அவற்றை சிங்கள மக்கள் மத்தியில் நேரடியாக துணிந்து சென்று கூறக் கூடிய தரப்புக்கும் நாம் ஆதரவு வழங்குவது தொடர்பில் பரிசீலிக்க முடியும்“ என்றும் அவர் குறிப்பிட்டார்.

You might also like