தேவாலய சுவர் வீழ்ந்து 13 பேர் உயிரிழந்த சோகம்!!

தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணத்தில் சிறப்பு பிரார்த்தனையின் போது தேவாலயத்தின் சுவர் இடிந்து வீழ்ந்த விபத்தில் 13 பேர் உயரிழந்தனர்.

தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணங்களில் ஒன்றான குவாசுலு-நாட்டால் மாகாணத்தில் பழம்பெருமை மிக்க பெந்தகொஸ்தே தேவாலயம் உள்ளளது.

இந்த மாகாணத்தில் சில நாள்களாக டொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் நேற்றிரவு இந்த தேவாலயத்தில் புனித வெள்ளிக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது மழை நீரில் நனைந்திருந்த தேவாலயத்தின் சுவர் திடீரென்று இடிந்து வீழ்ந்தது.

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

You might also like