தைவான் பிரதமரானார் சூ தசெங்-சாங்!!

0 51

தைவானில் முன்னாள் பிரதமரும், ஜனநாயக முற்போக்கு கட்சியின் முன்னாள் தலைவருமான சூ தசெங்-சாங்கை புதிய பிரதமராக அதிபர் தசாய் இங்-வென் நியமித்துள்ளார்.

தைவானில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பிரதமர் வில்லியம் லையின் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி பெருத்த பின்னடவைச் சந்தித்தது. தைவானை பொறுத்தமட்டில் உள்ளூர் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியைச் சந்திக்கும் போது, தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பதவி விலகுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் பிரதமர் வில்லியம் லை தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமரும், ஜனநாயக முற்போக்குக் கட்சியின் முன்னாள் தலைவருமான சூ தசெங்-சாங்கைப் புதிய பிரதமராக அதிபர் தசாய் இங்-வென் நேற்று நியமித்தார்.

இதற்கு முன் சூ தசெங்-சாங் கடந்த 2006- ஆம் ஆண்டு பிரதமராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் 2007- ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அந்தத் தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார்

You might also like