side Add

தொடர் சமநிலை- கோக்லி கணிப்பு!!

ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான மூன்­றா­வ­தும் இறு­தி­யு­மான ரி-20 ஆட்­டம் இன்று நடை­பெ­ற­வுள்ள நிலை­யில், இந்த ஆட்­டத்­தில் வெற்­றி­பெற்று தொட­ரைச் சம­நி­லை­யில் முடிப்­போம் என்று தெரி­வித்­தார் இந்­திய அணி­யின் தலை­வர் கோக்லி.

இந்­திய அணி ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளது. இந்த இரண்டு அணி­க­ளுக்­கும் இடை­யி­லான மூன்று ஆட்­டங்­க­ளைக் கொண்ட ரி-20 தொடர் தற்­போது நடை­பெற்று வரு­கி­றது. முத­லா­வது ஆட்­டத்­தில் ஆஸ்­தி­ரே­லியா வெற்­றி­பெற்­றது.

இரண்­டா­வது ஆட்­டம் மழை­யால் கைவி­டப்­பட்­டது. ஆக, முத­லிரு ஆட்­டங்­க­ளின் முடி­வில் ஆஸ்­தி­ரே­லிய அணி 1:0 என்ற அடிப்­ப­டை­யில் முன்­னி­லை­யில் உள்­ளது. மூன்­றா­வது ஆட்­ட­மான இன்று வெற்­றி­பெற்­றால் மட்­டுமே குறைந்த பட்­சம் தொட­ரைச் சம­நி­லை­யில் முடிக்க இய­லும் என்ற நெருக்­கடி இந்­தி­யா­வுக்கு ஏற்­பட்­டி­ருக்­கும் நிலை­யில் இவ்­வாறு தெரி­வித்­தார் கோக்லி.

‘‘ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான முத­லா­வது ரி-20 ஆட்­டத்­தில் இலக்கை நெருங்­கித் தோற்­ற­மை­யும், இரண்­டா­வது ஆட்­டத்­தில் மழை குறுக்­கிட்டு ஆட்­டம் கைவி­டப்­பட்­ட­மை­யும் ஏமாற்­றமே. எனி­னும் மூன்­றா­வது ரி-20 ஆட்­டத்­தில் சிறந்த ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்தி தொட­ரைச் சமன் செய்­வது என்­ப­தில் நாம் உறு­தி­யாக உள்­ளோம்’’ என்று கோக்லி மேலும் தெரி­வித்­தார்.

You might also like