தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம்!!

வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளது.

திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்துக் கலாச்சார மண்டபத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமனம் வழங்கப்படும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 1,302 பேர் நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய நிலையில், தகுதி பெற்றவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

You might also like