நகரச சபை ஊழியர்களுக்கு நினைவேந்தல்!!

வவுனியா நகரசபையின் கொல்களக் குழியில் கடமையின் போது வீழ்ந்து உயிரிழந்த நகரசபை ஊழியர்களின் 45 ஆம் நாள் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

மாடு வெட்டும் கொல்களத்தில் குழியொன்றைத் துப்பரவு செய்யும் பணியின் போது 4 ஊழியர்கள் விசவாயு தாக்கத்துக்கு உள்ளாகி உயிரிழந்தனர்.

புதிய அரச பொது ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில், வவுனியா நகரசபை மண்டபத்தில் அவர்களது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்வில் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

You might also like