நடப்­பாண்டு முழு­வ­தும் டெங்கு ஒழிப்பு வாரங்­கள்

சுகா­தார அமைச்சு அறி­விப்பு

வடக்கு மாகா­ணத்­தில் டெங்­கு­நோ­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு நடப்பு வரு­டம் முழு­வ­தும் டெங்கு ஒழிப்பு வாரங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என வடக்கு மாகாண சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இது­பற்றி அந்த அமைச்சு மேலும் தெரி­வித்­த­தா­வது: மாகா­ணத்­தில் டெங்­கு­நோய் பர­வு­வது ஓர­ளவு கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது. எனி­னும் டெங்கு நோய் பர­வு­வ­தற்­கான அபா­யம் தொட­ரந்து காணப்­ப­டு­வ­தாக அறி­ய­மு­டி­கி­றது.

இத­னால் டெங்கு நுளம்பு ஒழிப்பு நட­வ­டிக்கை மற்­றும் விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்கை தொடர்ச்­சி­யாக நடை­பெற்று வரு­கின்­றன. இதற்­காக சுகா­தார உத்­தி­யோ­கத்­தர்­கள் தமது பங்­க­ளிப்­பைச் சிறப்­பான முறை­யில் வழங்கி வரு­கின்­றார்­கள்.

டெங்­கு­நோ­யில் இருந்து பொது­மக்­க­ளைப் பாது­காப்­ப­தற்கு நடப்­பு­வ­ரு­டம் முழு­வ­தும் டெங்கு ஒழிப்புக்­கான சிறப்பு வாரங்­கள் தொடர்ச்­சி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

இதன்­போது பொது­மக்­க­ளின் வீட்­டுச் சுற்­றா­டல், அலு­வ­ல­கங்­கள், பாட­சா­லை­கள் போன்ற இடங்­க­ளில் அனை­வ­ரின் ஒத்­து­ழைப்­பு­ட­னும் இப்­ப­ணி­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும். டெங்கு பர­வக்­கூ­டிய சூழ்­நி­லை­களை உரு­வாக்­கு­ப­வர்­கள் இனம் காணப்­ப­டும் பட்­சத்­தில் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் – என்­றது .

You might also like