side Add

நடு வீதியில்  இளைஞனுக்கு நடந்த சோகம்- மக்கள் அதிர்ச்சி!!

விருந்துக்குச் சென்று திரும்பியபோது நடு வீதியில் இளைஞர் ஒருவர் பெற்றோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை அடுத்த பனங்காடி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (22), வருச்சூரைச் சேர்ந்த தன் நெருங்கிய நண்பர் வீட்டுக்கு விருந்துக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

விருந்தை முடித்துவிட்டு நண்பர்களுடன் வீடு திரும்பியுள்ளார். மதுரை- சிவகங்கை சாலையில் விளத்தூர் எனும் இடத்துக்கு அருகே மோட்டார் சைக்கிளில் அரவிந்த் சென்று கொண்டிருக்கும் போது, 2 சொகுசுக் கார்களில் வந்த மர்மக் கும்பல் நடு வீதியில் வழிமறித்துள்ளது.

அப்போது, அந்தக் கும்பல் இரும்பு ஆயுதங்களைக் கொண்டு அரவிந்த்தைக் கொடூரமாக வெட்டியும், குத்தியும் கொலை செய்துள்ளது.

பின்னர் அந்தக் கும்பல், இருசக்கர வாகனத்திலிருந்து பெற்றோலை எடுத்து அரவிந்த் மீது ஊற்றி எரித்துள்ளது. அந்த வழியாகச் சென்ற பயணிகள் இந்தச் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த கருப்பாயூரணி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

You might also like