நீராவியடிப் பிள்ளையார் ஆலய பெயர்ப்பலகைகள் நீக்கம்!!

முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் குருகந்த றாஜமகாவிகாரை என பௌத்த துறவியாலும், நீராவியடிப்பிள்ளையார் என கிராம மக்களாலும் இரண்டு பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அனுமதி அற்ற நிலையில் நாட்டப்பட்ட குருகந்த றாஜமகாவிகாரையின் பெயர்ப் பலகையையும், நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தின் பெயர்ப்பலகையும் இன்று அகற்றினர்.

வீதியில் இருந்து 15 மீற்றர் தூரத்துக்கு குறித்த இரண்டு பெயர்ப்பலகைகளும் காணப்பட்டுள்ளதால் அவை அகற்றப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like