side Add

நீரி­ழிவு நோயைத் தடுப்பது எப்படி?

நீரி­ழிவு நோய் உல­கையே அச்­சு­றுத்­தும் வகை­யில் ஒரு பெரும் பிரச்­சி­னை­யாக உரு­­­வெ­டுத்து நிற்­பது யாவ­­­ரும் அறிந்­ததே. பன்னாட்டளவில் ஏறத்­தாழ 400 மில்­லி­யன் மக்­கள் இத­னால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். இன்­னும் 15 ஆண்­டு­கள் செல்ல இந்­தத் தொகை 600 மில்­லி­ய­னைத் தாண்­டும் என்று எதிர்வு கூறப்­ப­டு­கின்­றது.

இந்த நிலை­யில் நீரி­ழிவு நோயை வரா­மல் தடுக்­க­லாமா?, இது நடை­மு­றைச் சாத்­­­தி­யமா? அல்­லது வெறும்­ கனவு தானா? இதை எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­த­லாம்? போன்ற வினாக்­கள் எம்­முன்னே எழுந்து மறைகின்றன.
அன்று கண்ட கன­வு­கள் சில இன்று உண்மையாவது போலவே எமது முயற்­சி­கள் சரி­யான திசை­யில் தொட­ரு­மாக இருந்­தால், இன்று காணும் கன­வு­கள் பலவும் நாளை உண்மையாவது நிச்­ச­­­யம். நீரி­ழிவு நோய்த்­த­டுப்­புத் தொடர்­பான கன­வு­க­ளும் அது போன்­றதே.

அன்று சுக­போக வாழ்வு வாழ்ந்த வச­தி­ படைத்த குடும்­பங்­க­ளி­டையே மட்­டும் அதி­கம் பர­வி­யி­ருந்த இந்த நோய் இன்று அனை­வ­ரை­யும் அசு­ர­ வே­கத்­தில் தாக்க ஆரம்­பித்­தி­ருப்­ப­தன் கார­ணம் என்ன?

அது குடும்­பங்­க­ளின் பொரு­ளா­தா­ரத்­தி­லும் ,வாழ்­வா­தா­ரத்­தி­லும் ஏற்­ப­டுத்­தும் தாக்­கங்­க­ளைத் தடுத்து நிறுத்­து­வது எப்­படி? நீரி­ழிவு நோய் வரும் வரை காத்­தி­ருந்து அந்த நோயின் கட்­டுப்­பாட்­டி­லும், கவ­னிப்­பி­லும் கூடிய கரிசனை கொள்ளப் போ­கி­றோமா? அல்­லது இந்த நோய் ஏற்­ப­டு­­­வதைத் தடுத்து நிறுத்­து­வ­தில் அதி­­­கூ­டிய அக்­கறை எடுக்­கப்­போ­கின்­றோமா? சிந்­திக்க வேண்­டிய தேவை இருக்­கி­றது­.

நோய் நிலைக்கான காரணங்கள்
இந்த நோய் வேக­மாக அதி­க­ரித்து வரு­வ­தற்­கான அடிப்­ப­டைக் கார­ணங்­க­ளாக பின்­வ­ரு­வன அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆரோக்­கிய மற்ற உண­வுப் பழக்­கங்­க­ளுக்கு நாம் அடி­மை­யா­யி­ருத்­தல்.

உடல் களைக்க வேலை செய்­யா­ம­லி­ருப்­ப­து­டன் ஒழுங்­கான உடற்­ப­யிற்சி செய்­வ­தில் ஆர்­வ­மற்­ற­வர்­க­ளாக இருத்­தல்.

உடல் நிறை சரி­யான அள­வில் பேணப்­ப­டாமை. எமது உடல் நிறையை எவ்­வ­ள­வா­கப் பேண வேண்­டும் என்­ப­தும் கூடத் தெரி­யா­மல் இருத்­தல். சிறி­த­ளவு உண்­டும் உடல்­நிறை தானா­கக் கூடி­யி­ருக்­கி­றது என்று கூறித் திருப்தி அடைந்து கொள்­ளும் நிலை­யில் இருத்­தல்.

இர­சா­ய­னப் பதார்த்­தங்­க­ளும் சீனி­­­யும் சேர்க்­கப்­பட்டு போத்­தல்­க­ளில் அடைத்து விற்­ப­னை­யா­கும் பானங்­களை அதி­கம் அருந்­து­தல். தாகம் எடுக்­கும் பொழுது சோடா குடித்­தல் . தேனீ­ருக்கு சீனி சேர்த்­தல்.

மக்­க­ளி­டையே ஆரோக்­கி­யம் பேணு­வது சம்பந்த­மான அறி­வும் விழிப்­பு­ணர்­வும் போதா­ம­லி­ருத்­தல். குறிப்பாக நோய்­வாய்ப்­பட்­ட­வர்­க­ளுக்­குத் தான் உண­வுக் கட்­டுப்­பா­டும், உடற்­ப­யிற்­சி­யும் தேவை என்ற தப்­பான அபிப்­பி­ரா­யம் மற்றும் சிறு வய­தில் எத­னை­யும் உண்ண முடி­யும் என்ற தவ­றான சிந்­தனை.

நீரி­ழிவு நோயை ஏற்­ப­டுத்­த­வல்ல சில சுகா­தா­ரப் பிரச்­சி­னை­களை ஆரம்ப நிலை­யில் கண்­ட­றிந்து ஏற்ற நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தில் ஆர்­வம் அற்­ற­வர்­க­ளாக இருத்­தல்.எனவே, இந்த அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­கள் சரி­யான முறை­யில் அணு­கப்­ப­டு­மா­யின் நீரி­ழிவு நோய் ஏற்­ப­டு­­­வ­தைத் தடுக்­கும் முயற்சி முன்­னேற்­றம் காணும்.

நோயை வெற்றிகொள்ள
மக்கள் பங்களிப்பு அவசியம்
நீரி­ழிவு நோய்த் த­டுப்பு என்­னும் பெரிய முயற்­சியை மருத்­து­வத்­துறை சார்ந்­த­வர்­க­ளால் மட்டுமே முன்­னெ­டுத்­துச் செல்ல முடி­யாது. இதற்கு அனைத்­துத் தரப்­பி­ன­ர­தும் தொடர்ச்­சி­யான முயற்­சி­ யும், பங்­க­ளிப்­பும் தேவைப்­ப­டு­கி­றது.

பாட­சாலை மாண­வர்­க­ளு­டன் ஆசி­ரி­யர்­க­ளும் இதில் பெரும் பங்­காற்ற வேண்­டிய தேவை இருக்­கி­­­றது. குறிப்பாக, ஆரோக்­கி­ய­மான வாழ்க்கை முறை மற்­றும் உணவு முறை சம்­பந்­த­மாகப் பாட­சாலை மட்­டத்­தி­லும், சமூக மட்­டத்­தி­லும், கருத்­த­ரங்­கு­க­ளை­யும் விழிப்­பு ­ணர்­வு­ச் செயற்பாடுகளையும் ஏற்­பாடு செய்­தல்,

பாட­சா­­­லை­க­ளி­லும் ,அலு­வ­லகச் சிற்­றுண்­டிச்­சா­லை­க­ளி­ லும் ஆரோக்­கி­ய­மற்ற உண­வுப் பாவனை மற்­றும் சீனி அதி­கம் சேர்க்­கப்­பட்ட மென்­பா­னங்­க­ளின் பாவ­னையை நிறுத்த நட­வ­டிக்கை எடுத்­தல்.

தேநீ­ருக்குச் சீனி பாவிப்­பதை நிறுத்தி தேவை ஏற்­ப­டின் இனிப்­பூட்­டி­க­ளைப் பாவிக்­கும் நடை­மு­றை­களை ஏற்­ப­டுத்­து­தல் போன்ற நட­வ­டிக்­கை­க­ளில் கவ­னம் செலுத்­து­தல் வேண்­டும்.

மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்
4உடற்­ப­யிற்சி செய்­வதை அனைத்­துத் தரப்­பி­னர்­க­ளுக்­கு­மான கட்­டாய நட­­­வ­டிக்­கை­யாக அறி­மு­கம் செய்ய வேண்­டும். வயது வேறு­பா­டின்றி அனைத்து தரப்­பி­ன­ரை­யும் உடற்­ப­யிற்சி செய்ய ஊக்­கப்­ப­டுத்த வேண்­டும்.
4பெற்­றோர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் தமது பிள்­ளை­கள் தினந்­தோ­றும் ஓடி விளை­யா­டு­கி­றார்­களா? அல்­லது உடற்­ப­யிற்சி செய்­கி­­­றார்­களா? என்­பதைக் கவ­னித்­துக் கொள்ள வேண்­டும்.

ஊட­கத்­து­றை­யா­னது நோய்த்­த­டுப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கும், சுகா­தார விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் கூடிய முக்­கி­யத்­து­வம் கொடுக்க வேண்­­­டும்.

சுகா­தா­ரத்­துறை சார்ந்­த­வர்­க­ளும் நோய்­த­டுப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு கூடிய முக்­கி­யத்­து­வம் கொடுப்­ப­து­டன், மற்­ற­வர்­க­ளுக்­கு முன்­னு­தா­ர­ண­மாக வாழ முயற்­சிக்க வேண்­டும்.

முப்­பது (30) வயது கடந்த அனை­வ­ரும் ஆறு மாதங்­க­ளுக்கு ஒரு தடவை தமது குருதி குளுக்­கோ­சின் அளவை சோதித்­துப் பார்த்­துக் கொள்­வது நல்­லது.

காலை தேநீ­ருக்கு முன் குரு­திக் குளுக்­கோ­சின் அளவு 11mg இலும் அதி­க­மாக இருந்­தால் மருத்துவ ஆலோ­ச­னை­யைப் பெற்­றுக் கொள்­வது அவ­சி­யம். குரு­திக் குளுக்கோசின் தளம்­பல் நிலை ஆரம்­பத்­தி­லேயே கண்­ட­றி­யப்­பட்­டால் நீரி­ழிவு ஏற்­ப­டு­வ­தைத் தடுக்க முடி­யும்.

குறைந்த நிறை­யு­டன் பிறக்­கும் குழந்­தை­க­ளுக்கு எதிர்­கா­லத்­தில் நீரி­ழிவு நோய் ஏற்­ப­டும் சாத்­தி­யக்­கூ­று­கள் அதி­க­மா­கும். எனவே கற்ப காலத்­தில் தாய்­மார் தமது உணவு முறை­யில் கவ­னம் செலுத்த வேண்­டும். இதன் மூலம் எதிர்­கா­லத்­தில் அவர்­க­ளது பிள்­ளை­க­ளுக்கு நீரி­ழிவு நோய் ஏற்­ப­டு­வ­தைத் தடுக்க முடி­யும்.

பரி­சுப் பொருள்­க­ளைத் தெரிவு செய்­யும் போது இனிப்பு வகை­க­ளைத் தெரிவு செய்­வதை முற்­றா­கத் தவிர்க்க வேண்­டும்.

வீட்­டுக்கு வரு­ப­வர்­க­ளுக்கு சோடா மற்­றும் இர­சா­யன மென்­பா­னங்­கள் கொடுப்­பதை நிறுத்த வேண்­டும். இல­கு­வில் செய்­யக்­கூ­டிய சுவை­யான, மலி­வான, ஆரோக்­கி­ய­மான புதிய உணவு வகை­க­ளும் , பானங்­க­ளும் அறி­ மு­கப்­ப­டுத்­தப்­ப­டல் வேண்­டும்.

இந்த முயற்­சி­யில் சமை­யல் கலை வல்லுநர்­கள் ஈடு­ப­டு வது அவ­சி­யம். இதன் மூலம் ஆரோக்­கி­ய­மற்ற உண­வுப் பாவ­னை­க­ளைப் பெரு­ம­ளவு குறைக்க முடி­யும்.

ஆரோக்கியமாக வாழ முயற்சிப்போம்
தற்­போது பலர் நீரி­ழிவு அல்­லது மார­டைப்பு நோய்­க­ளுக்கு முற்­பட்ட நிலை­க­ளி­லேயே இனங்­கா­ணப்­ப­டு­கின்­ற­னர். இந்த நிலையை ‘‘மெற்­றா­பொ­ளிக் சிண்ட்­றோம்’’ என்று கூறு­வார்­கள். இவர்­கள் தொடர்ச்­சி­யாக தேக ஆரோக்­கிய நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டா­து­விட்­டால் எதிர்­கா­லத்­தில் இவர்­க­ளுக்கும் இந்த நோய்த் தொற்று ஏற்­பட முடி­யும்.

இந்த நிலை­யில் உள்ள சில­ருக்கு நோய்­த­டுப்­­­பிற்­காக சில மாத்­தி­ரை­க­ளும் கொடுக்க வேண்­டிய தேவை ஏற்­ப­­­டு­கின்­றது. அத்­து­டன் அதி­க­ரித்த நிறை உள்­ள­வர்­கள், ‘அ க்­கந்தோ சிஸ்ணை கிறிக் கன்ஸ்’ எனப்­­­ப­டும் கறுப்பு நிறத்­தோல் மடிப்பு உள்­ள­வர்­கள், வேறு சில நோய்­நி­லை­கள் உள்­ள­வர்­கள் போன்­றோ­­­ருக்கு நீரி­ழிவு நோய் ஏற்­ப­டும் சாத்­தி­யக் கூறு­கள் அதி­க­மா­கும்.
இவர்­கள் நோய்த்­த­டுப்பு நட­வ­டிக்­கை­க­ளில் அதிக கவ­னம் செலுத்த வேண்­டிய தேவை இருக்­கி­றது. நாம் அனை­வ­ரும் ஆரம்­பத்­தி­லி­ருந்தே உடல் ஆரோக்­கிய நட­வ­டிக்­கை­க­ளைக் கடைப்­பி­டித்து , நோய்த்­த­டுப்பு நட­வ­டிக்­கை­க­ளி­லும் ஊக்­கத்­து­ட­னும் ஈடு­பட்டு வரு­வோ­மா­யி­ருந்­தால் நீரி­ழி­­வு நோயை மட்­டு­மல்ல இன்­னும் பல தொற்றா நோய்­கள் ஏற்­ப­டும் சந்­தர்ப்­பத்தை பெரு­ம­ளவு குறை­த்­துக்­கொள்ள முடி­யும்.

பொது மருத்துவ நிபு­ணர் ,
யாழ். போதனா மருத்துவமனை.

You might also like