நெதர்லாந்தில் திரையிடப்பட்ட பேரன்பு!!

தரமணி படத்துக்குப் பின்னர் ராம் இயக்கி உள்ள படம் பேரன்பு. மம்முட்டி, அஞ்சலி, தங்க மீன்கள் சாதனா, திருநங்கை அஞ்சலி, இயக்குநர் அமீர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பி.எல்.தேனப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் உருவாகி உள்ள இந்தப் படம், நெதர்லாந்தில் நடந்த 47- ஆவது ராட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. உலகளவில் 187 படங்கள் போட்டியிட்டதில் பார்வையாளர்களுக்கான முதல் 20 இடங்களைப் பெற்ற படங்களில் பேரன்பு படமும் ஒன்று.

இந்த நிலையில், அடுத்தப்படியாக ஷாங்காய் நகரில் நடைபெறவுள்ள பன்னாட்டுத் திரைப்பட விழாவிற்கு பேரன்பு படம் தெரிவாகியுள்ளது. ஜூன் 16 முதல் 25 ஆம் திகதி வரை நடக்கும் இவ்விழாவில் பேரன்பு படம் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியாக திரையிடப்படவுள்ளது.

விரைவில் படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களும், அதனைத் தொடர்ந்து படமும் வெளியிடப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close