பட்டப்பகலில் இளம்பெண் கடத்தல் -யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு!!

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் சற்றுமுன்னர் இளம் பெண் ஒருவர் முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட நபர் பொலிஸாரிடம் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணைக் கடத்தும் போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவர் அவதானித்துள்ளார்.

குறித்த முச்சக்கர வண்டியை அவர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். செம்மணி, ஆடியபாதம் வீதி ஊடாக திருநெல்வேலி, மருத்துவபீடம் வழியாக சென்று கொண்டிருந்த போது, முச்சக்கர வண்டியிலிருந்து ஆடையொன்றை வீசிய நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

You might also like