பதவி விலகிய முஸ்லிம் எம்.பிக்களுக்கு -நாடாளுமன்றில் ஆசன ஒதுக்கீடு!!

அரசிலிருந்து விலகிய 6 முஸ்லிம் அமைச்சர்களுக்கு நாடாளுமன்றில் பின்வரிசை ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று சேவிதர் நரேந்ர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இவர்கள் அமைச்சு பதவிகளில் இருந்து விலகியமைக்கான கடிதம் சபாநாயகருக்கு கிடைக்க பெற்றுள்ளது. அதனடிப்படையில் ஆசன ஒதுக்கீடுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் ஆகியோரது முன்வரிசை ஆசனங்களில் மாற்றம் ஏற்படாது.

கட்சிகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like