பயங்கரவாதிகள் தாக்குதல்- 10 மீனவர்கள் உயிரிழப்பு!!

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சிறிய நகரமான கொண்டுகா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர், அல்லு டாம் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றபோது திடீரென அங்கு வந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள், மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 10 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் சில மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த ராணுவத்தினர் அப்பகுதிக்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைகு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

You might also like