பற்களை சுத்தமாக்கும் கடுகு எண்ணெய்!!

சருமம், கூந்தல், பற்கள் மற்றும் உடல் உறுப்புகள் என அனைத்தையுமே ஆரோக்கியமாக வைத்து கொண்டால் தான் நீங்கள் அழகாக காணப்படுவீர்கள். அதிலும் குறிப்பாக பற்கள். உங்கள் பற்கள் வெண்மையாக இருந்தால் தான் உங்கள் புன்னகை மற்றவரை ஈர்க்கும்.

கடுகு எண்ணெய் மற்றும் உப்பு ஆகிய இரண்டையும் கொண்டு பற்களை பிரகாசிக்க செய்யலாம். பற்களில் மஞ்சள் கறை, பல் சொத்தை, ஈறுகளில் இரத்த கசிவு மற்றும் வீக்கம் போன்றவற்றை சரி செய்யவும் இவை பயன்படுகிறது.

கடுகு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து பல் தேய்த்தால் பற்களில் உள்ள கிருகிகள் அழிந்து ஈறுகள் சுத்தமாகும்.
உப்பு பற்களில் உள்ள கறைகளை அகற்றி பளிச்சிட செய்யும். மேலும் ஈறுகளில் இரத்த கசிவு, வீக்கம் போன்றவற்றை சரிசெய்து விடும்.

ஒரு சிட்டிகை கல் உப்பு மற்றும் கடுகு என்ணெய் இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

தூள் உப்பு பயன்படுத்துவதற்கு முன் சூரிய ஒளியில் 3 மணி நேரம் வைத்திருந்து பின் பயன்படுத்தவும்.

இதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பின் பல் மற்றும் ஈறுகளில் தேய்த்து 2 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்து விடவும். தொடர்ச்சியாக இப்படி செய்து வந்தால் பற்கள் சுத்தமாகவும். பளிச் நிறத்திலும் இருக்கும்.

You might also like