side Add

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்!!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) எதிராக வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 21,22 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தொடர்பாக குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதா அல்லது இல்லையா என்பது பற்றிய கட்டளை வாக்குமூல விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது, எதிரிகள் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வாவும், வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்கள சிரேஷ்ட அரச சட்டத்தரணி மாதவ தென்னகோனும் தத்தமது சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 1,2 ஆம் எதிரிகள் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதா அல்லது இல்லையா என்பது தொடர்பான கட்டளை வாக்குமூல விசாரணை இன்று இடம்பெற்றது.

இந்த வழக்கு விசாரணைக்காக சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட 6 சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

2005 – டிசெம்பர் மாதம் 25 ஆம் திகதி நத்தார் நள்ளிரவு ஆதாரனையின் போது, மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் வைத்து ஜோசெப் பரராஜசிங்கம் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

You might also like