பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா!!

யாழ்ப்­பா­ணம் பாசை­யூர் புனித அந்­தோ­னி­யார் ஆல­யப் பெரு­விழா நேற்று வெகு விம­ர்சை­யாக நடை­பெற்­றது.

பெரு­வி­ழாத் திருப்­ப­லியை பாகிஸ்­தான் குவேற்றா மறை­ மா­வட்ட ஆய­ரும் பாசை­யூர் மண்­ணின் மைந் த­னு­மா­கிய பேர­ருட் கலா­நிதி விக்­டர் ஞானப்­பி­ர­கா­சம் ஆண்­டகை ஒப்­புக்­கொ­டுத்­தார்.

குழந்தை இயேசு கெபி­யில் இருந்து பான்ட் வாத்­திய அணி­வ­குப்­பு­டன் அழைத்து வரப்­பட்­டார். மாலை 3.45 மணிக்கு ஆரம்­ப­மான புனித அந்­தோ­னி­யா­ரின் தேர்ப்­ப­வனி மாலை 7.45 மணிக்கு ஆல­யத்­தைச் சென்­ற­டைந்து திருச் சொரூப ஆசி வழங்­கப்­பட்­டது.

அதே­வேளை நேற்­று­முன்­தி­னம் மாலை இடம்­பெற்ற நற்­க­ரு­ணைப் பெரு­வி­ழாத் திருப் ப­லியை யாழ்ப்­பாண மறை­மா­வட்ட குருமு­தல்­வர் அருட்­பணி ப.யோ.ஜெப­ரட்­ணம் அடி­கள் ஒப்­புக்­கொ­டுத்­தார். நற்­க­ரு­ணைப் பவ­னி­யும் இடம்­பெற்­றது. திரு­வி­ழா­வில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் கலந்து கொண்டனர் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close