பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்!!

‘சொப்பன சுந்தரி நான்தானே’ என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமான பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

பிரபல சினிமா பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர் மலையாள பட உலகில் அதிகம் பாடல்களை பாடியுள்ளார். பிருதிவிராஜ் நடித்த ஜே.சி.டேனியல் படத்தில் இடம்பெற்ற காற்றே காற்றே என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

விக்ரம் பிரபு நடித்து திரைக்கு வந்த ‘வீர சிவாஜி’ படத்தில் பாடிய ‘சொப்பன சுந்தரி நான்தானே’ பாடல் அவரை மேலும் பிரபலப்படுத்தியது. என்னமோ ஏதோ படத்தில் ‘புதிய உலகை புதிய உலகை’ பாடல் உள்பட பல படங்களில் பாடி இருக்கிறார். வித்தியாசமான குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்த வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது.

இந்தப் படத்தை விஜயகுமார் இயக்கவுள்ளார்.இதில் விஜயலட்சுமியாக கேரளாவில் மீன் விற்று படித்து பிரபலமான மாணவி ஹனன் ஹமீது நடிக்கிறார். விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயமானது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அந்த திருமணம் நின்று போனது.

இந்த நிலையில் பலகுரல் கலைஞர் அனூப் என்பவருக்கும் விஜயலட்சுமிக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டினரும் முடிவு செய்துள்ளனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நாளை விஜயலட்சுமியின் வீட்டில் நடக்கிறது. திருமணம் ஒக்ரோபர் 22– ஆம் திகதி வைக்கம் மகாதேவ கோவிலில் நடைபெறும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close