புதி­ய­ வே­லர் சின்­ன­க்கு­ளத்தில் – காட்டு யானை­கள் அட்­ட­கா­சம்!!

வவு­னியா தெற்கு பிர­தேச சபை­குட்­பட்ட புதி­ய­வே­லர் ­சின்­னக்­கு­ளம் கிரா­மத்­தில் கடந்த சனிக்­கி­ழமை இரவு பத்து மணிக்கு ஊருக்­குள் புகுந்த யானை­கள் பயன்­த­ரும் மரங்­க­ளான வாழை, பப்­பாசி தென்னை போன்­ற­வற்றை அழித்து நாச­மாக்­கி ­யுள்­ள­து­டன் வீட்­டின் கத­வி­னை­யும் உடைத்­துச் சென்­றுள்­ளன.

இது குறித்து பாதிக்­கப்­பட்ட கிராம மக்­கள் தெரி­வித்­த­தா­வது:
குறித்த கிரா­மம் ஏ-9 வீதி­யில் இருந்து 2 கிலோ­மீற்­றர்­கள் தொலை­வில் உள்­ள­து­டன் அடிக்­கடி யானை­க­ளின் தாக்­கத்­துக்கு உள்­ளாகி வரு­கின்­ற­மை­யும் குறிப்­பி­டத்­தக்­கது. வீட்டு முற்­றத்­தில் வந்து நிற்­கும் யானை­க­ளால் ஒவ்­வொரு நாளும் இரவு வேளை­களை அச்­சத்­து­ட­னேயே கழிக்க வேண்­டி­யுள்­ளது. இத­னால் எமது வாழ்­வா­தா­ர­மும் கடு­மை­யாக பாதிக்­க­ப்பட்­டுள்­ளது. குறித்த கிரா­மத்­தில் 145 குடும்­பங்­கள் வாழ்ந்து வரு­கின்­றன.

எமது பிர­தான பொரு­ளா­தார மார்க்­க­மாக தோட்­டச் செய்­கையே உள்ளது. மரங்­கள் வளர்ந்து பயன்­த­ரும் நிலை­யில் இருக்­கும் பொழுது யானை­கள் மற்­றும் பன்றி போன்ற காட்டு விலங்­கு­கள் வந்து அழித்து விட்டு செல்­கின்­றன. இவை வழ­மை­யா­கவே நடை­பெற்று வரு­கின்­றன.

இது தொடர்­பாக சம்­பந்­த­பட்ட திணைக்­க­ளங்­க­ளுக்கு பல முறை தெரி­ய­ப் படுத்­தி­யும் எமது பிரச்­சி­னையை தீர்க்க யாரும் முன்­வ­ரு­கி­றார்­கள் இல்லை. பாது­காப்பு வேலி அமைப்­ப­தா­னால் ஒவ்­வொரு குடும்­ப­மும் மூவா­யி­ரம் ரூபாய் பணம் வழங்­கு­மாறு வன ஜீவ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­தால் கோரப்­ப­டு­கி­றது. எனவே எமது நிலையை கருத்­தில் கொண்டு எமது தோட்டப் பயிர்­களை பாது­காப்­ப­தற்கு உரிய திணைக் களங்­கள் விரைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்-­–என்­ற­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close