புதிய வரிகள் தொடர்பான தீர்மானத்தால்- கரைச்சி பிரேச சபையில் குழப்பம்!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பொதுச்சந்தையில் புதிதாக வரிகள் அறவிடுவது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தால், ஆளும் மற்றும் எதிர் தரப்பினர்களுக்கு இடையே அமைதியின்மை ஏற்பட்டது.

இதனையடுத்து கரைச்சி பிரதேச சபையின் நடவடிக்கைகள் பத்து நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

பொதுச் சந்தையில் இதுவரை காலமும் நடைமுறையிலுள்ள கட்டணத்தை விட, புதிதாக கட்டணத்தை அறவிடுவதற்கும் இன்றைய சபை அமர்வில் ஆளும் தரப்பினரால் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

இதன் போது எதிர் தரப்பு உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதனால் ஆளும் மற்றும் எதிர் தரப்பு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட விவாதம் வாய்த்தர்க்கமாக மாறியது. அதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. சபை பத்து நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

You might also like