பொதியுடன் நின்றவரால்- பரபரப்பான மக்கள்!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள பாடசாலையொன்றுக்கு முன்னால் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நீண்ட நேரம் பொதியுடன் நின்ற நபரால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அங்கு வந்து பொதியை சோதனையிட்ட பின்னர் அதற்குள் ஒன்றுமில்லை எனத் தெரிவித்துடன் பதற்றம் நீங்கியது.

ஏ 9 முதன்மைச் சாலையுடன் இணைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் பயணியொருவர் நீண்டநேரம் காத்திருந்துள்ளார்.

இதனை அவதானித்த மாணவர்கள் அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். அதிபரும் பொலிஸாருக்கு அறிவிக்கவே அங்கு விரைந்து வந்த பொலிஸார் குறித்த நபரைச் சோதனையிட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like