பொன்னியின் செல்வன் நாவல் படமாக்கப்படுகிறது!!

தமிழ் இலக்கியத்தின் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவாகி இன்றளவும் சிறந்து விளங்கி வரும் சரித்திர நாவல் `பொன்னியின் செல்வன்’.

தமிழில் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க வேண்டும் எனப் பல இயக்குநர்களும் கனவு கண்டு வந்த நிலையில் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘பொன்னியின் செல்வன் நாவலை சரித்திர வலைத்தொடராக தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த நாவலில் ராஜராஜசோழன் தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தினையும் அந்தக் காலத்தில் நடைபெற்ற அரசியலையும் தனது புனைவைக் கலந்து அழகுற நாவலாக்கியிருப்பார் கல்கி. பாகுபலி படம் வெளியான பின்பு ராஜமௌலி தான் பொன்னியின் செல்வனை இயக்குவதற்கு சரியான ஆள் என தமிழகத்தில் பலரும் கூறிவந்த நிலையில் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் தைரியமாக களத்தில் இறங்கியுள்ளார்.

You might also like