பொருளாதார அபிவிருத்தி குழுவில் -தமிழ் எம்.பிக்களும் தெரிவு!!

0 30

நாடாளுமன்ற துறைசார் பொருளாதார அபிவிருத்திக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதில் வடக்கை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான எம.ஏ.சுமந்திரன், திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா, ஈ.சரவணபவன உள்ளிட்டு 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேலாண்மை குழுவின் செயலாளராக சி.கலன்ஆரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த மாதத்தில் இடம்பெறும் துறைசார் மேலாண்மை பொருளாதார அபிவிருத்திக் குழு கூட்டத்தில் வடக்கில் நலிநடைந்துள்ள பொருளாதார அபிவிருத்தி, சமுர்த்தி முத்திரை, வேலைவாய்ப்பு மற்றும் பட்டதாரிகள் நியமனம் குறித்து ஆராய வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like