பொலித்தீன் பாவனை தொடர்பில் -விழிப்புணர்வு நடைபவனி!!

உலக கடல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று இடம்பெற்றது.

பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைபவனி வல்வெட்டித்துறை மகளிர் கல்லூரியில் இருந்து வல்வெட்டித்துறை நகரசபை வரை இடம்பெற்றது.

நடைபவனியில் வல்வெட்டித்துறை நகரசபையினர், அபிவிருத்திக்கான இலங்கை உதவி ஊக்கு மையத்தின் பணியாளர்கள், சூழல் நேய அமைப்புக்கள், கிராமசேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அவிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

வல்வெட்டித்துறை நகரசபையும் அபிவிருத்திக்கான இலங்கை உதவு ஊக்கு மையமும் இணைந்து நிகழ்வை நடத்தின.

You might also like