போதைப் பொருளை வீதியோரம் வீசி விற்பனை செய்த கில்லாடி!!

போதைப்பொருள் பைக்கற்றுகளை வீதியோரமாக வீசிச் சென்ற நபரைப் பதுளை மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் ஈசி கேஷ் மூலம் பணத்தைப் பெற்று போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொது இடங்களில் போதைப்பொருளை வீசி கொள்வனவாளர்களுக்கு தொலைப்பேசி மூலம் இடத்தை குறிப்பிட்டு அவர் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைபொருளின் பெறுமதி 2 இலட்சம் ரூபா என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.

You might also like