போரால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக பண்ணை திறப்பு!!

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக கோழிபண்ணை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தனிநபர் ஒருவரின் முயற்சியால் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதர நலன் கருதி சைன் என்ற பெயரில் இந்தப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

கிராமத்தைச் சேர்ந்த 5 பேருக்கு முதற்கட்டமாக வேலைவாயப்பைப் பெற்றுக் கொடுத்து ஆறாயிரம் கோழிகளையும், கால்நடைகளையும் வளர்பதை இலக்காக கொண்டு இந்தப் பண்ணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க மறைகுரு எல்.அருள்தாஸ் மற்றும் கோழிப்பண்ணையின் பணிப்பாளர் அ.தேவகுமார் இருவரும் இணைந்து கோழி பண்ணையைத் திறந்து வைத்தார்.

You might also like