மக்களின் தற்கால பிரச்சினைகள் – சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடல்!!

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு வெடிப்புச் சம்பவங்களின் பின்னரான பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பாகவும், மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கலந்துரையாடல் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப அலுவலகத்தில் இன்று இடம் பெற்றது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மன்னார், வவுனியா பிராந்திய இணைப்பாளர் எம்.ஆர். பிரியதர்சன் தமைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில், சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

You might also like