மக்கள் ஆதரவு மையத்தால்- 35 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!!

0 11

யாழ்ப்பாணம் செங்குந்த இந்துக்கல்லூரியில் தரம் 6 இல் புதிதான இணைந்துள்ள 35 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மக்கள் ஆதரவு மையத்தின் ” ௧ல்விக்கு தோள் கொடுப்போம் ” எனும் செயற்திட்டத்தின் ஊடாக 30,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மக்கள் ஆதரவு மையத்தின் சிறுவர் நல திட்ட இணைப்பாளர் சண்முகலிங்கம் சஞ்ஞீவ் பாபு இதற்கான நிதியுதவியை வழங்கினார்.

மக்கள் ஆதவு மையத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் ச.சுரேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் , மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You might also like