மணல் ஏற்றிய சாரதிக்கு ரூ.50 ஆயிரம் தண்டம்!!

0 30

யாழ்ப்பாணம் தென்மராட்சி தெற்கு தனன்களப்புப் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 50 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது .

கடந்த வருடம் நவம்பர் 12ஆம் திகதி இரவு தனன்களப்புப் பகுதியில் ரோந்து சென்ற பொலிஸார் அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்துமாறு டோர்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சிய போது சாரதி வாகனத்தை நிறுத்தாமல் கொண்டு சென்றுள்ளார்.

பொலிஸார் துரத்திய போது வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளார். மணல் ஏற்றிய நிலையில் கைவிடப்பட்ட வாகனத்தைப் பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்று சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

தலைமறைவாக இருந்த சாரதியை பொலிஸார் கடந்த நான்காம் திகதி கைது செய்து மறுநாள் நீதிமன்றில் முற்படுத்தினர். சாரதியை இன்று வரை விளக்கமறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சாரதி குற்றத்தை ஒப்புக் கொண்டார். 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த நீதிவலான். தண்டப் பணம் செலுத்தாவிடின் ஒரு வருட சிறைத்தண்டனையை அனுபவிக்குமாறும், மணலைப் பறிமுதல் செய்யமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

You might also like