மதுபான நிலையங்களை மூடுமாறு பேராயர் கோரிக்கை!!

நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் பின்னர் வன்முறையாக மாறியது. இதில் பல வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.

மதுபோதையில் இருந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பேராயர் அரசிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

You might also like