side Add

மன்னாரில் சிறப்புச் சொற்பொழிவு!!

‘வள்ளுவம் கண்ட தமிழ்த் தேசியம்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வு மன்னாரில் நேற்று நடைபெற்றது.

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் தாழ்வுபாடு வீதியில் உள்ள குடும்பப்பணி நிலைய மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் இருந்து வருகைதந்த அருட்திரு. வெனி இளங்குமரன் அடிகளார்  சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

நிகழ்வில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மாணவிகளால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது.

மன்னார் கலார்ப்பனா நாட்டியப்பள்ளி மாணவிகளின் வரவேற்பு நடனம்
இடம்பெற்றது.

மன்னார் தமிழ்ச்சங்கத் தலைவர் அருட்திரு, தமிழ் நேசன் அடிகளார் அறிமுக உரையாற்றினார்.

சொற்பொழிவின் நிறைவில் மன்னார் மாவட்டச் செயலர் மோகன் றாஸ் வாழ்த்துரை வழங்கினார்.

You might also like