மன்னார் மனித புதைகுழி வளாகத்துக்கு -முழுமையான பாதுகாப்பு!!

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிகைகள் மேற்கொள்ளப்படும் சதொச வளாகத்தை, காற்று மற்றும் மழையில் இருந்து பாதுகாப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மன்னார் நீதவான் மேற்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் மன்னார் மனித புதை குழி தொடர்பான நிலையினை அறிவதற்காண அகழ்வு மற்றும் ஆய்வுப் பணிகள் இடம் பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அதிகரித்த காற்று மற்றும் மற்றும் அதிகரித்த மழை காரணமாக அகழ்வு பணிகள் நடை பெறும் வளாகம் நீரினால் சூழ்ந்து காணப்பட்டதை தொடர்ந்து அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

குறித்த வளாகத்தினை முழுவதுமாக மூடுவதற்கான நிதி பங்களிப்பு மற்றும் உதவி காணமல் ஆக்கப்பட்டோருக்காகச் செயற்படும் அலுவலகத்தில் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த கோரிக்கைக்கு அமைவாக மனித புதை குழி வளாகத்தினை முழுவதுமாக சுற்றி மூடுவதற்கான உபகரணங்கள் மற்றும் பொருள்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

You might also like