மரதன் ஓட்டத்தில் வேட்டி இடறி கீழே விழுந்தார் அமைச்சர்!!

0 302

இந்தியா கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் நடந்த மரதன் ஓட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் தேவகவுடா வேட்டி இடறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் 10 நாள்கள் கொண்டாடப்படும் தசரா பண்டிகை தொடங்கி நடந்து வருகிறது. மைசூர் நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளை கர்நாடக அரசு நாள்தோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று முதியோர்களுக்கான 21 கி.மீ. மரதன் ஓட்டம் நடைபெற்றது.

இந்த மரதன் ஓட்டத்தை மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ஜி.டி. தேவகவுடா கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இந்த மரதன் ஓட்டத்தைக் கொடியசைத்து தொடக்கி வைத்தது மட்டுமல்லாமல் தானும் இந்த ஓட்டத்தில் பங்கேற்றார்.

ஆனால் ஓட்டப்போட்டிக்கான முறையான கால்சட்டை ஏதும் அணியாமல் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து அமைச்சர் தேவகவுடா மரதன் ஓட்டத்தில் பங்கேற்றார். அமைச்சர் தேவகவுடா ஓடத் தொடங்கியதும் அவருடன் அதிகாரிகள் சிலரும் ஊடகத்தினரும் ஓடத் தொடங்கினர்.

ஓடும்போது அவ்வப்போது வேட்டி கீழே நழுவாமல் சரி செய்துகொண்டே தேவகவுடா ஓடிச் சென்றார். ஆனால் ஒரு கட்டத்தில் வேட்டி தடுக்கி அமைச்சர் தேவகவுடா திடீரென கீழே விழுந்தார். இதைப் பார்த்ததும் உடன் ஓடி வந்தவர்கள் தேவகவுடாவைத் தூக்கி விட்டு ஆசுவாசப்படுத்தினார்கள்.

கீழே விழுந்ததால் அமைச்சருக்கு கை, காலில் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. அதன்பின் அவர் ஓட்டத்தில் பங்கேற்காமல் பாதியிலேயே திரும்பினார்.

You might also like