மரவள்ளிக் கிழங்குக் கறி

0 437

தேவையானவை :
மரவள்ளிக்கிழங்கு – 1/2 கிலோ
உப்பு தேவைக்கு
தே. எண்ணெய் – 2 மே. கரண்டி

அரைக்க :
தேங்காய் – 3 மே. கரண்டி
மிளகாய் வற்றல் – 1
மஞ்சள் பொடி – 1/2 தே கரண்டி
வெள்ளை பூண்டு – 2
கருவேப்பிலை சிறிது

தாளிக்க :
தாளித்தல் கிடையாது. முடிக்கும் போது தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை பிய்த்து போட்டு இறக்கவும்.

செய்முறை :
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை அரைத்துக் கொள்ளவும். ரொம்ப கரகரப்பாகவும் இல்லாமல், மையாகவும் இல்லாமல் அரைக்கவும்.
கிழங்கை பொடியாக வெட்டி, நன்கு வேக வைக்கவும்.
முக்கால் பாகம் வெந்ததும், உப்புச் சேர்க்கவும்.
அரைத்ததை சேர்த்து, ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்.
தேங்காய் எண்ணெய்யும் கருவேப்பிலையும் சேர்த்து இறக்கிவிடவும்.
சுவையான கிழங்குக் கறி தயார்.

You might also like